தீண்டாமை சுவர் விவகாரம்….சார் ஆட்சியர் உத்தரவை அமுல் படுத்த கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்!

Loading

ராணிப்பேட்டை, சார் ஆட்சியர் மற்றும் உட்கோட்ட நிர்வாக நடுவர் கடந்த 2019 மே 2 அன்று வழங்கிய உத்தரவு அமுல் படுத்த கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சிபிஎம் சார்பில் திங்களன்று (ஆக 4) மாவட்ட தலைவர் பி. ரகுபதி தலைமையில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வாலாஜா, அம்பேத்கர் நகர், வழி பாதை மறித்து கட்டப்பட்ட தீண்டாமை சுவர் அகற்ற வேண்டும் என்ற விவகாரம் தொடர்பாக சார் ஆட்சியர் உத்தரவு அமுல் படுத்த கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சிபிஎம் சார்பில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் நடை பயணம் தொடங்கி வாலாஜா வட்டாட்சியர் அலுவலகம் வரை கவன ஈர்ப்பு நடைபயணம் காவல்துறை மறுத்ததன் அடிப்படையில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தீ.ஒ.மு. மாநில தலைவர் த. செல்லக்கண்ணு, மாநில து.செயலாளர் பி. செல்வன், மாவட்ட செயலாளர் எபிஎம். சீனிவாசன், மூத்த தோழர்கள் டி. சந்திரன், எல்.சி. மணி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். காசிநாதன், தா. வெங்கடேசன், எஸ். கிட்டு, ஆர். மணிகண்டன், ஆ. தவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இறுதியாக சத்தியமூர்த்தி நன்றி கூறி முடித்து வைத்தார்.

கோரிக்கைகளாக, வாலாஜா, அம்பேத்கர் நகர், வழி பாதை மறித்து கட்டப்பட்ட தீண்டாமை சுவர் அகற்ற வேண்டும். சர்வே எண். 2038/2 சர்க்கார் நத்தத்தில் அமைந்துள்ள இரும்பு கேட் சுவற்றை அகற்ற சார் ஆட்சியர் மற்றும் உட்கோட்ட நிர்வாக நடுவர் உத்தரவு அமுல் படுத்த வேண்டும். சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனி சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பேசி முழக்கங்களை எழுப்பினர். இறுதியாக ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து தலைவர்கள் பேசினார்கள்.

 

 

 

0Shares