மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்..பல்வேறு விபத்துகளில் பலியான குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

Loading

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு , அவர்கள், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோர், விதவை, கல்வி உதவி தொகை, வங்கி கடன், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 140 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து, முன்னாள் படைவீரர் ஆர். இராமன் என்பவருக்கு கண்கண்ணாடி பெறுவதற்கான நிதியுதவி மானியம் ரூ.4,000/-க்கான அனுமதி ஆணையினையும், திருமதி தேவியம்மாளின் மகன் உயிரிழந்த பீ.ராஜ்குமார் அவர்களின் ஈமச்சடங்கு நிதியுதவி ரூ.10,000/-த்திற்கான அனுமதி ஆணையினையும், வருவாய் துறை சார்பில், குன்னூர் வட்டம் எடச்சேரி பங்களா அருகில் ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்த குன்னூர் பழைய ஆஸ்பிட்டல் லைன் பகுதியை சேர்ந்த அப்துல் கனி என்பவரின் வாரிசு தாரரான திரு.அப்துல்லா என்பவருக்கு முதலலமைச்சரின் பொது நிவாரணநிதியிலிருந்து ரூ.1.லட்சம் பெறுவதற்கான அனுமதி ஆணையினையும், முதலமைச்சரின் சாலை விபத்து நிவாரண நிதியிலிருந்து பெரிய அளவில் காயம் அடைந்த 2 நபர்களுக்கு தலா ரூ.50,000/-த்திற்கான ஆணையினையும் மற்றும் சிறுகாயம் அடைந்த 1 நபருக்கு ரூ.10,000/-த்திற்கான அனுமதி ஆணையினையும், பந்தலூர் வட்டம் சேரங்கோடு கிராமத்தை சேர்ந்த நீரில் மூழ்கி உயிரிழந்த ராஜ்குமார் என்பவரின் தாயார் சிவபாக்கியம் என்பவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 இலட்சம் பெறுவதற்கான அனுமதி ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா உதகை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மரு.ஜெயராமன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலாமேரி, இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) மரு.ராஜசேகரன், சமூக பாதுகாப்பு திட்டம் (தனித்துணை ஆட்சியர்) ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் கண்ணன் (கணக்குகள்), பழனிச்சாமி (நிலம்), மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், உதவி இயக்குநர் (மாவட்ட தொழில் மையம்) திலகவதி, சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, கோத்தகிரி நகராட்சி ஆணையாளர் மோகன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சிவசங்கர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.சதானந்தகல்கி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குப்புராஜ், உதகை நகர்நல அலுவலர் மரு.சிபி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0Shares