ரூ.5 லட்சம் கேட்டு கடத்தல் – பள்ளி மாணவனை கொன்று, எரித்த இருவரும் போலீசால் சுட்டுப்பிடிப்பு!

Loading

பெங்களூருவில் ரூ.5 லட்சம் Löசம் கேட்டு 13 வயது பள்ளி மாணவனை கடத்திய இருவர், மாணவனை கொன்று உடலை எரித்தனர். முன்னாள் டிரைவர் உள்ளிட்ட இருவரும் போலீசால் சுட்டுப் பிடிக்கபட்டனர்.

பெங்களூருவில் பேராசிரியரின் 13 வயது மகன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் டிரைவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு,8வது வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவன் நிஷ்சித், டியூஷனுக்கு சென்றபின் வீடு திரும்பவில்லை. பின்னர், அவரது தந்தை அஜ்சுத்துக்கு ரூ.5 லட்சம் Löசம் கேட்டு வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் வந்தது. விசாரணையில், சிறுவன் பன்னரகட்டா அருகே உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்.

சிபிசி நாராயணின் கண்காணிப்பில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தகவல்களைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். கடைசியாக பன்னரகட்டா வனப்பகுதியில் பதுங்கியிருந்த குருமூர்த்தி (25) மற்றும் கோபால் (27) ஆகிய இருவரும் போலீசை தாக்க முயன்றனர்.போலீசார் சுட்டதில் இருவரும் காயமடைந்து கைது செய்யப்பட்டனர்.

முக்கிய குற்றவாளி குருமூர்த்தி, மாணவனின் வீட்டில் முன்னாள் கார் டிரைவராக பணிபுரிந்தார்.
அப்போது பணமுள்ள விவரங்களை தெரிந்துகொண்டு கடத்தல் திட்டம் செய்ய முடிவு செய்து
மாணவனை கடத்தி கொன்று, சடலத்தை எரிக்க முயற்சி செய்தது தெரியவந்தது.

போலீசை தாக்க முயன்றனர்.போலீசார் சுட்டதில் இருவரும் தீவிர சிகிச்சையில் உள்ளனர்
ஏற்கனவே குருமூர்த்திக்கு ஏற்கனவே ஒரு POCSO வழக்கு உள்ளது“மாணவனை தேட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன; வாட்ஸ்-அப் தகவலின் அடிப்படையில் அவர்கள் பிடிபட்டனர் என
இன்ஸ்பெக்டர் குமாரசாமி தெரிவித்தார்.பெங்களூருவில் ரூ.5 லட்சம் கேட்டு 13 வயது பள்ளி மாணவனை கடத்திய இருவர், மாணவனை கொன்று உடலை எரித்தனர். முன்னாள் டிரைவர் உள்ளிட்ட இருவரும் போலீசால் சுட்டுப் பிடிக்கபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0Shares