இன்றைய ராசிபலன் – 31.07.2025
இன்றைய ராசிபலன்:-
மேசம்
சமூக ஆர்வலர்களுக்கு மக்கள் செல்வாக்கு கூடும். பெண்கள் தங்கள் எதிர்பாலினரிடம் கவனமுடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய தொழில் நுட்பத்தை கையாளுவீர்கள். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். உடல் நலம் தேறும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
ரிசபம்
புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். நண்பர்கள் யாரிடமும் பகைத்துக் கொள்ள வேண்டாம். உடன் பிறந்தவர்கள் உதவுவர். வீட்டில் மகிழ்ச்சி தங்கும். உத்தியோகத்தில் அமைதியான போக்கே உண்டாகும். பெண்களுக்கு இடுப்பு கை, கால் வலி மற்றும் மாதவிடாய் போன்ற பிரச்சினைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மிதுனம்
தம்பதிகளிடம் ஒற்றுமை கூடும்.பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். ஆன்மீகச் சுற்றுலா சென்றுவருவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகஸ்தர்கள் மேலிடத்தினரிடம் பகைத்துக் கொள்ளாதீர்கள். பெண்கள் தங்கள் வீட்டு விசயத்தை வெளியாளிடம் பகிரவேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
மார்கெட்டிங் பிரிவினர்கள் தங்கள் இலக்கை எட்ட அதிக அலைச்சல்கள் உண்டாகும். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். நண்பர்கள் ஒற்றுமையுடன் இருப்பர். பண வரவு தாமதப்படும். வேலையில் தங்கள் கணவரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
பணவரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை நம்புங்கள். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. நினைத்த காரியம் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்களால் நன்மை உண்டு. தங்கள் பிள்ளை அயல்நாடு செல்வார். உடல் நலம் தேறிவரும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கன்னி
வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பர். தங்கள் பிள்ளைகளின் திருமணத்திற்காக தேடியவர்கள் நல்ல வரண் கிடைக்கப் பெறுவீர்கள். வர வேண்டிய பணம் வசூலாகும். பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை
துலாம்
பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களால் நன்மை உண்டாகும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். தம்பதிகளின் அன்யோன்யம் பெருகும். நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பிரிந்த உறவினர் உங்களை தேடி வருவார்கள்.
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
விருச்சிகம்
தொழிலதிபர்களிடமிருந்து வேலையாட்கள் தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வியாபாரம் சிறப்பாகச் செல்லும். பங்குச் சந்தை லாபம் தரும். உடன்பிறந்தோர் உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முற்படுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம் : கடல்நீலம்
தனுசு
நவீன பொருட்களின் செலவுகள் அதிகரிக்கும். தேவையில்லாத மனபயம் விலகும். இதுநாள் வரை பேசாதவர்கள் மீண்டும் பேசுவர். உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களால் நன்மைகள் உண்டாகும். பிள்ளைகள் தங்கள் பேச்சினை கேட்பர். உடல் ஆரோக்கியம் சீர்படும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மகரம்
வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். பணவிசயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துபோவது நல்லது. உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கும்பம்
உத்யோகஸ்தர்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்கும் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். அக்கம் பக்கத்தாரிடம் நட்பு பலப்படும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும். உறவினர்களால் நன்மை உண்டு. உடல் வலிமை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மீனம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை