நிர்வாணமாக மாணவருடன் வீடியோ கால்..போக்சோவில் பள்ளி ஆசிரியைக்கு காப்பு!
மராட்டிய மாநிலம் நவி மும்பையில் பள்ளி மாணவருடன் அரை நிர்வாணமாக வீடியோ கால் பேசிய பெண் ஆசிரியைக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவி மும்பையில் உள்ள ஒரு பள்ளியின் பெண் ஆசிரியை, அங்கு படிக்கும் ஒரு மாணவருக்கு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளார்.இதன் தொடர்ச்சியாக, அரை நிர்வாண கோலத்தில் வீடியோ கால் மூலம் அந்த மாணவருடன் தொடர்ந்து பேசினார்.
பெற்றோர் புகார்:இந்த தகவல் மாணவரின் பெற்றோருக்கு தெரிய வந்தது.இதையடுத்து மாணவரின் தந்தை போலீசில் புகார் அளித்து, ஆசிரியை செய்தது தனது மகனின் உளவியல் நலனை பாதித்துள்ளது என கூறினார்.
போலீஸ் நடவடிக்கை:புகாரின் அடிப்படையில் ஆசிரியை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஆசிரியை கைது செய்யப்பட்டார்; அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர் வேறு மாணவர்களுடன் இதுபோன்ற தொடர்பில் இருந்தாரா என்பதை கண்டறிய சமூக ஊடக கணக்குகள் மற்றும் சாட்சிகள் சோதனை செய்யப்படுகின்றன என போலீசார் தெரிவித்தனர்.