13 வயது சிறுமியின் மூளை இரத்தக் கசிவுக்கு தீர்வு..மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சாதனை!

Loading

ஹோல் எக்ஸோம் சீக்வென்ஸிங் மூலம்13 வயது சிறுமியின் மூளை இரத்தக் கசிவுக்கு தீர்வு கண்ட மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது நரம்பியல் அறுவைச் சிகிச்சை துறையின் தலைவர் மற்றும் முதல் நிலை நிபுணர் டாக்டர் செல்வ முத்துக்குமரன் கூறியதாவது:மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நரம்பியல் சார்ந்த மரபியல் பிரச்சனை ஒன்றுக்கு தனது நிபுணத்துவத்தின் மூலம் தீர்வு கண்டு சாதனை படைத்திருக்கிறது.13 வயது சிறுமி ஒருவருக்கு அபூர்வமான மரபியல் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு வந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமிக்கு பயாலஜிக்கல் தெரபி முறையில் ரத்தக் கசிவை நிறுத்தி அவரது உயிரை காப்பாற்றி இருக்கிறது.

இக்கோளாறு இருப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் சிறிய ரத்தத் தட்டுகள் ஆகியவை பாதிக்கப்படும் இதன் விளைவாக மூளையில் அலர்ஜி ஏற்பட்டு அதன் விளைவாக ரத்த தட்டுகள் சேதம் அடைவது பக்கவாதம் மூளையில் ரத்தக் கசிவு ஆகியவை ஏற்படக்கூடும். இவரது விஷயத்தை இவரது விஷயத்தைப் பொறுத்தவரை மருத்துவர்கள் ஹோல் எக்ஸோம் சீக்வென்ஸிங் எனப்படும் அதிநவீன மரபியல் பரிசோதனையை மேற்கொண்டனர். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழு அடலிமுமாப் என்ற உயிரியல் மருந்தை சிகிச்சையின் போது அளித்தது. இது அரிப்பு மற்றும் வீக்கத்தை சரி செய்து ரத்த தட்டுகளை நிலைப்படுத்தும் தன்மை உடையதாகும். இச் சிகிச்சை தொடங்கியதில் இருந்தே நோயாளிக்கு ரத்தக்கசிவு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது நரம்பியல் அறுவைச் சிகிச்சை துறையின் தலைவர் மற்றும் முதல் நிலை நிபுணர் டாக்டர் செல்வ முத்துக்குமரன், டாக்டர் செந்தில்குமார், இணை மருத்துவ நிபுணர் டாக்டர் இணை மருத்துவர் ஜெபர்லின் சினேகா மற்றும் மருத்துவமனை சார்பில் திலீப் பெர்னார்ட் ஆகியோர் பங்கேற்றனர்.

0Shares