அண்ணன்-தம்பி வெட்டிக்கொலை: 7 பேர் கைது..வெளியான பகீர் தகவல்!
ரூ.40 ஆயிரம் பண பிரச்சினையால் கண்ணன், கார்த்திக்கை காளிதாஸ் மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட 7 பேர் சேர்ந்து வெட்டிக்கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் காமராஜர் நகரை சேர்ந்த தம்பதி கண்ணன் பிரியா (30). இவர்களுக்கு திருமணமாகி 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்தநிலையில் சம்பவத்தன்று கண்ணன் தனது நண்பர்களுடன் அடியார்குளம் படித்துரையில் மது அருந்திஉள்ளார். பின்னர் அவரது நண்பர்கள் அங்கிருந்து சென்றுவிட்ட அங்கு கண்ணனின் தம்பி கார்த்திக் வந்து தனது அண்ணனிடம் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமிகள் அரிவாளால் கண்ணனை சரமாரியாக வெட்டினர். இதனை தடுக்க முயன்ற கார்த்திக் அவர்களை தடுத்தார். இதில் ஆத்திரம் அடைந்த மர்ம ஆசாமிகள் கார்த்திக்கையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில், ரத்த வெள்ளத்தில் மிதந்த கண்ணன், கார்த்திக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர்.இதனைத்தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் இரட்டைக்கொலை வழக்கு தொடர்பாக காமராஜர் நகரை சேர்ந்த காளிதாஸ், முத்துப்பேட்டையை சேர்ந்த யஸ்வந்த், எல்.என்.புரம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார், பஞ்சாத்தியை சேர்ந்த அய்யப்பன், சமத்துவபுரத்தை சேர்ந்த சத்திய சேகரன், சதீஷ்குமார், ராமநாதபுரத்தை சேர்ந்த முனீஸ்வரன் ஆகிய 7 பேர் நாகுடி போலீசில் சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.