மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியர் கைது!
குமரி மாவட்டம் குலசேகரம் அருகே பள்ளி மாணவிகளிடம் அத்து மீறி பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது ,என்னதான் காவல்துறை பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி குற்றங்களை தடுத்தாலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் பாலில் குற்றங்களும் நாளுக்கு நாள் அது அதிகரித்து வருகிறது.
சமீப காலமாக தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு அளிப்பது அதிகரித்து உள்ளது.இந்த சம்பவங்களில் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.இந்தநிலையில் குமரி மாவட்டம் குலசேகரம் அருகே பள்ளி மாணவிகளிடம் அத்து மீறி பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் செயல்பட்டு வரும் நடுநிலைப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றிவந்த தோட்டவாரத்தை சேர்ந்த ரமேஷ்குமார்,பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் , இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கல்வி அதிகாரிகள் மற்றும் , கலெக்டருக்கும் புகார் தெரிவித்தனர்.
அதன் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மையென தெரியவந்தது.இதையடுத்து புகாரின் அடிப்படையில் போலீசார் தலைமை ஆசிரியர் ரமேஷ்மார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.