பல்வேறு திட்ட பணிகள்..உள்துறை அமைச்சர் நமசிவாயம் துவக்கி வைத்தார்!
மண்ணாடிபட்டு தொகுதி கொண்டாரெட்டிப்பாளையம் (KR பாளையம்) கிராமத்தில் உள்ள வி.ஐ.பி நகரில் உட்புற தெருகளுக்கு சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை புதுச்சேரியின் நமது மாநில மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. நமசிவாயம் அவர்கள் துவக்கி வைத்தார்.
இதேபோல மண்ணாடிபட்டு தொகுதி கூனிச்சம்பட்டு கிராமத்தில் உள்ள குளக்கரை வீதி (தாமரைக் குளம்) மற்றும் புது நகரில் உள்ள விடுபட்ட சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜையை புதுச்சேரியின் நமது மாநில மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. நமசிவாயம் அவர்கள் துவக்கி வைத்தார்.
அதுமட்டுமல்லாமல் மண்ணாடிபட்டு தொகுதிக்குட்பட்ட கூனிச்சம்பட்டி கிராமத்தில் உள்ள ராஜவாய்க்கால் இருளர் குடியிருப்புக்கு குடிநீர் குழாய் அமைப்பதற்கான பூமி பூஜையை புதுச்சேரியின் நமது மாநில மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. நமசிவாயம் அவர்கள் துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து மண்ணாடிப்பட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேத்தம்பாக்கம் கிராமம் அம்மட்டன்குளம் அருகிலுள்ள பகுதியில் தற்போது நிலவிவரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க அமட்டன்குளம் அருகாமையில் பொதுப்பணித்துறை மூலம் ரூபாய் 6.40 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதுச்சேரியின் நமது மாநில மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. நமசிவாயம் அவர்கள் துவக்கி வைத்தார்.
பின்னர் மண்ணாடிப்பட்டு தொகுதி, கொண்டா ரெட்டிபாளையம் (K.R . பாளையம்) கிராமத்தில் நிலவிவரும் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க கூனிச்சம்பட்டு பழைய ஏரிக்கரை அருகாமையில் பொதுப்பணித்துறை மூலம் ரூபாய் 14.98 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதுச்சேரியின் நமது மாநில மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. நமசிவாயம் அவர்கள் துவக்கி வைத்தார்.
முன்னதாக மண்ணாடிபட்டு தொகுதி பாஜக நிர்வாகி திரு. வீரராகவன் அவர்களுக்கு புதுச்சேரியின் நமது மாநில மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. நமசிவாயம் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து மண்ணாடிப்பட்டு தொகுதி திருக்கனூர் லயன்ஸ் கிளப் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் புதுச்சேரியின் நமது மாநில மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. நமசிவாயம் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.