மனஅழுத்தம்,செல்போன் பார்த்ததை தாய் கண்டித்த தாய்.. மாணவி,மாணவன் தற்கொலை!
செல்போன் பார்த்ததை தாய் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்,இதேபோல மனஅழுத்ததில் இருந்த மாணவர் ஒருவர் 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். பட்டப்படிப்பு படித்து வந்த ஆதித்யா சச்சின்,சென்னை ராயப்பேட்டை மாசில்லாமணி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார், இந்த மாணவனின் தந்தை உதிரிபாகங்கள் விற்கும் கடையை நடத்தி வருகிறார்.இந்தநிலையில் மாணவன் சச்சின் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுவதுடன் இதற்காக சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று கல்லூரி முடிந்து வீடு திரும்பிய சச்சின், அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 7-வது மாடிக்கு யோகாசனம் செய்ய சென்றபோது திடீரென அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொணடர்,இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ராயப்பேட்டை போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல மற்றொரு சம்பவம் தேனி மாவட்டம் காமயகவுண்டம்பட்டி, அருகே நடந்துள்ளது.அங்குள்ள கருமாரிபுரத்தை சேர்ந்த தம்பதி சங்கிலி மற்றும் இவரது மனைவி ஈஸ்வரி ஆகியோர் தனது வீட்டின் அருகில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர்ராயப்பன்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்த மதுமிதா, படிக்காமல் செல்போன் பார்த்து கொண்டிருந்ததனை தாய், செல்போன் பார்ப்பதை நிறுத்திவிட்டு படிக்குமாறு கண்டித்தார். இதனால் மனமுடைந்த மதுமிதா நள்ளிரவில் பெற்றோர் தூங்கியதும், வீட்டின் ஒரு அறையில் மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.இந்தசம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.