செஞ்சி கோட்டை வரலாற்று உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்..முதலமைச்சருக்கு யாதவ மக்கள் இயக்கம் வலியுறுத்தல்!
![]()
தமிழ்நாடு முதலமைச்சர் செஞ்சி கோட்டை நேரில் ஆய்வு செய்து வரலாற்று மக்களுக்கு உண்மையை தெரிவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழ் சமூகத்தை ஒன்று திரட்டி செஞ்சி கோட்டை முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என செஞ்சியில் யாதவ மக்கள் இயக்க நிறுவன தலைவர் செங்கம் கு.ராஜாராம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தனியார் கூட்டரங்கில் யாதவ மக்கள் இயக்கம் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் செஞ்சி சத்யா தலைமையில் நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் செஞ்சி கோட்டையை 300 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த ஆனந்தக் கோனின் வம்சாவழி மன்னர்களான கிருஷ்ணக் கோன், கோனாரிக் கோன், புலியக் கோன்,கோட்டிலிங்க கோன் உள்ளிட்டோருக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
ஆலோசனை கூட்டத்தில் யாதவ மக்கள் இயக்கம் நிறுவன தலைவர் செங்கம் கு.ராஜாராம் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார்.அப்போது பேசிய அவர் செஞ்சி கோட்டையை வரலாற்று புராதான சின்னமாக அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும்,அதே சமயம் செஞ்சி கோட்டையை சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த ஆனந்தக் கோனின் வம்சாவழி மன்னர்கள் ஆட்சி காலத்தில் தான் செஞ்சி கோட்டை கட்டமைக்கப்பட்டது என்ற வரலாற்றை மறைத்து மராட்டிய மன்னர்கள் கட்டிய கோட்டை என்று அறிவிக்கப்பட்டதை ஏற்க்க முடியாது என்றும் இதற்கு முதன்முதலில் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு யாதவ மக்கள் இயக்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் மராட்டிய மன்னர் கட்டிய கோட்டை என்பதற்கு மறுப்பு தெரிவிக்காமல் பட்டாசு வெடித்து கொண்டாடியது வருத்தம் அளிப்பதாகவும், மராட்டிய மாநில அரசியலை கருத்தில் கொண்டு மத்திய பாஜக அரசு இந்த வரலாற்று பிழையை செய்து இருந்தால் தமிழ்நாட்டில் கடந்த தேர்தலில் வாங்கிய ஓட்டுகளில் பாதியை கூட வாங்க முடியாது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து போடுவது ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்தார்.இந்திய தொல்லியல் துறை கல்வெட்டு மற்றும் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் எழுதி புத்தகத்தில் உள்ள ஆதாரங்கள் பொய்யா?என்றும் உண்மையை மறைத்து வரலாற்று பிழையை திணிப்பு நடைபெறுவதை ஒருபோதும் ஏற்க்க மாட்டோம் அதே போல் ஆண்டுதோறும் ஆனந்தக் கோனின் பிறந்த நாள் ஜெயந்தி விழா கொண்டாட உள்ளதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து யாதவ மக்கள் இயக்கம் நிறுவன தலைவர் செங்கம் கு.ராஜாராம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசிய அவர் சுமார் 1000 ஆண்டு பழமையான விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக யூனெஸ்கோ நிறுவனம் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதே சமயம் செஞ்சி கோட்டையின் வரலாற்றை பிழையாக மராட்டிய மன்னர்கள் கட்டிய கோட்டை என்று வரலாற்று பிழையாக அறிவிக்கப்பட்டு இருப்பதை ஏற்க்க முடியாது.1190 ஆம் ஆண்டில் ஆனந்தக் கோனின் ஆட்சிக் காலத்தில் இந்த செஞ்சி கோட்டையை கட்டப்பட்டது என்று இந்திய தொல்லியல்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. அப்போது தொல்லியல் துறை கூறியது பொய்யா? அல்லது ஆனந்தக் கோனின் பெயர் வந்தால் தமிழன் பெயர் உலக அளவில் தமிழர் அடையாளம் வந்து விடும் என்று மறைக்கப்படுகிறதா? இதை எதிர்க்க வேண்டிய மத்திய-மாநில அரசுகள் பட்டாசு வெடித்து வரவேற்பது ஏற்றுக் முடியாது.செஞ்சி கோட்டையை நவாப் கான்,நாயக்க மன்னன், தேசிங்கு மன்னன், விஜயநகரப் பேரரசு உள்ளிட்ட பல மன்னர்கள் ஆட்சி செய்தனர். அந்த வகையில் மராட்டிய மன்னர் வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தார்.ஆனால் இந்த செஞ்சி கோட்டையை உருவாக்கியது ஆனந்தக் கோன் தான் என்பதை மத்திய அரசு உண்மையை உலகத்திற்கு சொல்ல வேண்டும்.அனைத்து ஆதாரங்கள் உள்ள போதும் தொல்லியல் துறை மறைக்கிறது.
தமிழ்நாட்டில் தமிழ் தமிழ் என்று கூறும் தமிழக அரசியல் கட்சிகள் இந்தியை எதிர்த்து அரசியல் செய்யும் அரசியல் கட்சிகள் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை தவிர வேறு யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.இதை தமிழக முதல்வரும் வரவேற்று இருப்பது வேதனை அளிக்கிறது. தமிழக முதல்வர் செஞ்சி கோட்டையை தொல்லியல்துறை அழைத்து வந்து நேரில் ஆய்வு செய்து 90 நாட்களுக்கு மத்திய அரசுக்கு கடிதம் மற்றும் நேரடியாக தகவல் தெரிவித்தால் இந்த வரலாற்று பிழையை மாற்றி அமைக்க அனைத்து விதமான முகாந்திரம் உள்ளது.அப்படி இல்லை என்றால் அனைத்து தமிழ் சமூகத்தையும் ஒன்றுதிரட்டி செஞ்சி கோட்டை முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்த போவதா தெரிவித்தார்.
இந்த 1000 ஆண்டுகள் முன்னாள் ஆனந்தக் கோன் மன்னன் மற்றும் அவரது வம்சாவழி மன்னர்கள் இந்த கோட்டையை 300 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தனர் என்ற வரலாற்று பிழையை தடுக்க துப்பில்லை என்றால் எதற்கு மத்திய மாநில அரசுகள் இருக்கின்றன? தமிழக முதல்வர் ஆய்வு செய்து உண்மையை தமிழக மக்களுக்கும் யூனெஸ்கோக்கும் தெரிவிக்க வேண்டும் என யாதவ மக்கள் இயக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் அப்படி இல்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த உள்ளோம் என்றார்.மேலும் மிகப்பெரிய அரசியல் தலைவர் மருத்துவர் ராமதாஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு அறிக்கை வெளியிட்டார்.அதில் இந்த செஞ்சி கோட்டையை வன்னியர் மன்னர் கட்டினார் என்று தெரிவித்துள்ளார். வன்னியர் சங்கம் ஆரம்பித்து 50 ஆண்டுகளும், பாமக ஆரம்பித்து 37 ஆண்டுகளும் கடந்துள்ளது. இதில் எங்கேயும் செஞ்சி கோட்டையை வன்னியர் கட்டியது என்று சொல்லி வரலாற்று பதிவு செய்து இருக்கின்றார்களா? இன்றைக்கு வரலாற்று நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டதும் உண்மையை மறைத்து தவறான தகவலை பொது வாழ்வில் உள்ள அவர் கூறலாமா? உங்களிடம் உள்ள ஆதாரத்தை காட்டுங்கள் என்றும் மத்திய மாநில அரசுகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் துணைச் செயலாளர் வீரப்பன், வர்த்தக அணி சரவணன், விவசாய அணி வெங்கடேசன், மாவட்ட செயலாளர்கள் ஸ்ரீதர், கோகுல், அருள், ராமச்சந்திரன், பாலாஜி, மணிவண்ணன், சீனிவாசன்,ராஜாங்கம், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

