கூடுதலாக நிதி வழங்க வேண்டும்..நிர்மலா சீதாராமன் சந்தித்து சட்டப்பேரவை தலைவர் செல்வம் கோரிக்கை!

Loading

புதுடெல்லி சென்றுள்ள புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் திரு செல்வம் ஆர் அவர்கள்மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது மத்திய நிதி அமைச்சர் அவர்கள் புதுச்சேரியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து
சட்டப்பேரவை தலைவர் அவர்களிடம் கேட்டறிந்தார்.

சட்டப்பேரவை தலைவர் அவர்கள் புதுச்சேரியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்களுக்கும் புதிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் சிறப்பு மானியமாக கூடுதலாக நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மத்திய நிதி அமைச்சர் அவர்கள் மத்திய அரசு புதுச்சேரியின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும் புதுச்சேரிக்கு தேவைப்படுகின்ற நிதி உதவிகள் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

0Shares