தனது தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா! 

Loading

வில்லியனூர் தொகுதி பயனாளிகளுக்கு தொடர் நோய்க்கு அடையாள அட்டைகளை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார்.
புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் தொடர் நோயை குணப்படுத்த நிதி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 28 பயனாளிகளுக்கு உதவி தொகை பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி வில்லியனூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் நடந்தது.
இதில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மாநில எதிர்க்கட்சித் தலைவருமான இரா, சிவா அவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சரவணன், விவசாய அணி துணை அமைப்பாளர் கோபி, தொமுச தலைவர் அங்காளன், ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் கதிரவன், தொகுதி துணை செயலாளர் அரிகிருஷ்ணன், தொகுதி செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், கிளைக் கழக நிர்வாகிகள் முருகேசன், கார்த்திகேயன், மனோகர், அருள்மணி, ஆனந்து, கோவிந்தராஜ், நடராஜன், ரகு, அன்பரசன், சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வில்லியனூர் தொகுதியைச் சேர்ந்த  பயனாளிகளுக்கு கல்வீடு கட்டுவதற்காக தவணைத் தொகைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், தொகுதி  சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான அரசாணை மற்றும் தவணைத் தொகைக்கான அடையாள அட்டையை வழங்கினார்.
இதில், குடிசை மாற்று வாரிய இளநிலை பொறியாளர் அனில் குமார், கள ஆய்வாளர் இளங்கோவன் மற்றும் திமுக பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, அவைத் தலைவர் ஜலால், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹாலித், அயலக அணி அமைப்பாளர் ஷாஜகான், தொமுச தலைவர் அங்காளன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சரவணன், விவசாய அணி துணை அமைப்பாளர் கோபி, தொகுதி துணை செயலாளர்கள் ஹரி கிருஷ்ணன், ஜெகன்மோகன், தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் கேவி ஆர் ஏழுமலை, அக்பர், கிளைக் கழக நிர்வாகிகள் ராஜி, மூர்த்தி, காசிநாதன், மிலிட்டரி முருகன், சரவணன் ,முருகேசன், வரதராஜன், சராபுதீன், சுரேஷ், பாலகுரு, கலைமணி, சுல்தான், கமால் பாஷா, ராமஜெயம், ராஜேந்திரன், கோவிந்தராஜ், நடராஜன், முருகன், அசார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0Shares