நடிகைக்கு ஓராண்டு சிறை ..தங்கக் கடத்தல் வழக்கில் கோர்ட் அதிரடி!

Loading

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிறையில் உள்ள நடிகை ரன்யாராவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் போதைப் பொருள் மற்றும் தங்கம் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது, சமீப காலமாக விமானங்கள் மூலம் வரும் பயணிகளிடம் சோதனை செய்யும் போது ஏராளமான போதை பொருட்கள் தங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது,குறிப்பாக இதுபோன்ற செயல்களில் நடிகை ஒருவர் சமீபத்தில் மாட்டிக் கொண்டார், அவர் தற்போது சிறையில் கம்பி எண்ணி வருகிறார், வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வரும் பயணிகள் தங்கள் யுத்தியை பயன்படுத்தி பல்வேறு வழிமுறைகளில் அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவி தங்கத்தை கடத்தி சிலர் தப்பி விடுகின்றனர் சிலர் மாட்டிக் கொள்கின்றனர்.

அந்த யுத்தியில்துபாயில் இருந்து பெங்களூரு விமான நிலையத்துக்கு தங்கம் கடத்தி வந்ததாக கன்னட நடிகை ரன்யா ராவை கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 கிலோ தங்கம் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது ரன்யா ராவ் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தங்கக் கடத்தல் வழக்கில் அமலாக்கத் துறையும் சிபிஐயும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக அமெரிக்க குடியுரிமை உள்ள தருண் ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார்..

இந்த நிலையில், செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரன்யாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும், தண்டனை காலம் முழுவதும் ஜாமின் கோரும் உரிமை கிடையாது என்று கோர்ட்டு தெரிவித்துள்ளது.

0Shares