இலவச மருத்துவ பரிசோதனை முகாம் ..சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார்!
புதுச்சேரி தவளகுப்பம் இலவச மருத்துவ பரிசோதனை சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் இணைந்து நடத்தும் இலவச ஒருங்கிணைந்த மருத்துவ பரிசோதனை முகாம் இன்று 15.07.2025 காலை தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.
இந்த இலவச சிறப்பு மருத்துவ முகாமை மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் திரு செல்வம் ஆர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்திற்கான பரிசோதனை காசநோய் பரிசோதனை இதர இரத்த பரிசோதனைகள் கண் பரிசோதனை பல் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவ காப்பீட்டு திட்ட பதிவு ஆகியவை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இயக்குனர் திரு டாக்டர் செவ்வேல் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க தலைவர் தவளக்கு பொண்ணு சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் சக்திவேல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.