இன்றைய ராசிபலன் – 12.07.2025

Loading

இன்றைய ராசிபலன் – 12.07.2025

ராசிபலன்:-
மேஷம்

திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமணம் கை கூடும். பண வரவு சீராக இருக்கும். நண்பரின் உதவி கிடைக்கும். வெளிநபருடன் வாதம் வேண்டாம். தேகம் பளிச்சிடும். சுறுசுறுப்பு கூடும். உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் கூடும். பெண்களுக்கு வீட்டு செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் வெற்றி தரும்.

அதிர்ஷ்ட நிறம்: கரும் பச்சை

ரிஷபம்

உத்யோகத்தில் மதிப்பு கூடும். தம்பதிகள் விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளின் திருமண முயற்சி பலிதமாகும்.உணவு விசயத்தில் கவனம் தேவை. உடல் நலம் சிறப்பாக இருக்கும். தம்பதிகளிடையே அன்பு கூடும். உறவினர்கள் வருகை வீட்டில் மகிழ்ச்சியை நிரப்பும். பகுதி நேர வேலை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

மிதுனம்

இன்று புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் தங்களுடைய அனைத்துவிதமான காரியங்களை துவங்கலாம். ஆனால், மிருகசீரிஷம் மறறும் திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். மேலும், தாங்கள் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்புRasiPalan Aanmigam

கடகம்

உத்யோகத்தில் பதவி உயர்வு ஏற்படும். வெளியூர் பயணத்தால் அசதி ஏற்படும். இந்த பயணங்களால் நன்மைகள் ஏற்படும். அலுவலகத்தில் நிம்மதி நிலவும். குடும்பத் தலைவிகள் ஆடை ஆபரணச் சேர்க்கை செய்வர். ஒரு சிலர் புதிய நகை திட்டத்தில் பணத்தை சேகரிக்க துவங்குவர்.

அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்

சிம்மம்

உறவினர்கள் உதவுவர். நல்ல செய்தி மனமகிழ்ச்சியைத் தரும். திடீர் பயணங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை புரிந்துக் கொள்வார்கள். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். காதலில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. மாணவர்கள் நன்கு படித்து முன்னேறுவர்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கன்னி

சகோதர உறவு மேம்படும். பிள்ளைகளுக்கு படிப்பதற்குண்டான வசதியினை செய்து கொடுப்பது நல்லது. ஆன்மீக யாத்திரை செல்வீர்கள். வியாபாரத்தில் உள்ளவர்கள் நிரந்தர கம்பெனிகளுக்கு மட்டும் கடனுக்கு பொருட்களை கொடுக்கலாம். பெண்களுக்கு நல்ல வரன் கிட்டும். காதல் கசக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

துலாம்

கடவுள் நம்பிக்கை கூடும். குலதெய்வ கோவில்களுக்குச் சென்று வருவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். அரசியல்வாதிகளுக்கு தங்கள் கட்சித் தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள். தம்பதிகளின் ஒற்றுமை ஓங்கும். சிலருக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

விருச்சிகம்

நினைத்த காரியம் நிறைவேறும். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு கூடும். கமிஷன் துறையினருக்கு லாபம் கிடைக்கும். தம்பதிகளிடம் சிறு சிறு கருத்துவேறுபாடுகள் தோன்றும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழிலில் ஏற்றம் உண்டு. கலைஞர்களுக்கு பாராட்டுகள் குவியும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

தனுசு

வெளிநாடு முயற்சி பலிக்கும். ஏஜென்ட்களுக்கு லாபம் கிடைக்கும். தாங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாண்டு அதிக லாபத்தினை ஈட்டுவீர்கள். சிறு தூர பயணம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மகரம்

காதல் திருமணத்தில் முடியும். பெரியவர்களின் சம்மதம் கிடைக்கும். தம்பதிகளிடையே பிணக்கம் நீங்கும். உடல் நலம் பலப்படும்.பிள்ளைகளுக்கு அளவுக்கதிகமாக செல்லம் கொடுக்காமல் இயல்பு வாழ்க்கையினை புரிய வைக்கவும். கூடுமானவரை சிக்கனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கும்பம்

வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சுமூகமாக நடைபெறும்.இரும்பு வியாபாரம் லாபம் தரும். கணினித் துறையினர் சுபிட்சம் காண்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தாங்கள் நினைத்ததற்கும் மேலாகவே சம்பள உயர்வு கிட்டும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கதவை தட்டும். உடலில் பொலிவும் உற்சாகமும் மிகும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மீனம்

காதல் கசக்கும்.குடும்பப் பொறுப்பினை உணர்வீர்கள். பூர்வீகச் சொத்து வந்தடையும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர் . தங்களுக்கு பிடித்த கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கும். பணத்திற்கு குறைவு ஏற்படாது. செலவு அதிகரிக்கும். சிக்கனம் நடவடிக்கைகள் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

0Shares