மது குடிப்பதை தட்டி கேட்ட வாலிபர்..கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?
திருவள்ளூர் அடுத்த ஈக்காடு கண்டிகை பகுதியில் உறவினர்களுடன் தகராறில் ஈடுபட்ட போதை ஆசாமிகளை தட்டி கேட்ட இளைஞர் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது :
திருவள்ளூர் அடுத்த ஈக்காடு கண்டிகை பகுதியைச் சார்ந்தவர் கார்த்திகேயன் (42). இவருக்கு சந்தியா (34)என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர் .கார்த்திகேயன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந் நிலையில் நேற்று வழக்கம்போல் வேலை முடிந்து ஈக்காடு கண்டிகை பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு கார்த்திகேயன் வந்துள்ளார்.
அப்போது கார்த்திகேயன் வீட்டிலிருந்து நான்கு வீடு தள்ளி உள்ள உறவினர் வீட்டின் அருகே இளைஞர்கள் மது அருந்தி கொண்டிருந்ததை உறவினர்கள் தட்டி கேட்டுள்ளனர். இதனால் மது அருந்திக் கொண்டிருந்த போதை இளைஞர்களுக்கும் உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து உறவினர்களுடன் போதை இளைஞர்கள் தகராறில் ஈடுபடுவதை கார்த்திகேயன் வீடியோ எடுத்துள்ளார்.
இதனால் கோபமடைந்த மது போதை இளைஞர்கள் கார்த்திகேயனை தாக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் இரு தரப்பிற்கும் ஏற்பட்ட தகராறில் கார்த்திகேயனை மது போதை இளைஞர்கள் தாக்கியதில் படுகாயமடைந்து மயக்கம் அடைந்தார்.இதனையடுத்து கார்த்திகேயனை மீட்ட அவரது உறவினர்கள் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர்.
ஆனால் அவரை சோதித்த மருத்துவர்கள் கார்த்திகேயன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதால் அவரின் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள புல்லரம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தனது உறவினர்களுடன் மது போதை ஆசாமிகள் தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட இளைஞர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.