மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆய்வு !

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் பருவ மழைகால முன்னெச்சரிக்கையாக மழைநீர் வெள்ளம் வெளியேறும் வகையில் கால்வாய்கள் அனைத்தையும் ஆட்சியர் பார்வையிட்டு சீரமைக்க வலியுறுத்தி வருகிறார்.

அதேபோல் திருவள்ளூர் நகராட்சி பகுதியில் மழைநீர் கால்வாய்களை ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டார். அதில், நகராட்சியில் உள்ள வி.எம்.நகர், ஜெயின் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் கால்வாய்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மழைநீர் எளிதாக செல்லும் வகையில் தூர்வாரி சீரமைக்கவும் வேண்டும். இப்பணிகளை மழைக்காலம் தொடங்கும் முன்பு கால்வாய் ஓரம் ஆக்கிரமிப்பு இருந்தால் உடனே அகற்றி சீரமைக்க வேண்டும் என கூறினார்.

அதைத் தொடர்ந்து காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள கால்வாய்களையும் பார்வையிட்டார். அப்போது, மழைக்காலங்களில் காக்களூர் பகுதியில் கால்வாய் ஆக்கிரமிப்பால் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கும் நிலை இருக்கிறது. அதனால், எங்கெங்கு மழை நீர் தேங்கும் இடங்களை கண்டறிவதோடு, அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் உடனே நீர்வளத்துறை அதிகாரிகள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவும் அவர் ஆலோசனை வழங்கினார்.

அப்போது, நகராட்சி ஆணையாளர் தாமோதரன், நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், முன்னாள் நகர்மன்ற தலைவர் பொன்.பாண்டியன், வட்டாட்சியர் ரஜினிகாந்த், துணை வட்டாட்சியர் சா.தினேஷ், நகராட்சி சுகாதார அலுவலர் மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வார்டு உறுப்பினர் அருணா ஜெயகிருஷ்ணா, காக்களூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுபத்ரா ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0Shares