தொடரும் மாரடைப்பு மரணங்கள்.. மக்கள் அதிர்ச்சி!
![]()
கர்நாடகாவில் 4-ம் வகுப்பு மாணவன், சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாரான இளம்பெண் உள்பட மேலும் 6 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்.இந்த தொடர் மாரடைப்பு மரணங்களால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
சமீபகாலமாக கர்நாடகாவில் மாரடைப்பு தொடர்பான இறப்புகள் அதிகரித்து வரும் சம்பவங்கள், பொதுமக்களின் கவலை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான மக்கள் இதய பரிசோதனைக்காக குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடகத்தில் மாரடைப்புக்கு மேலும் 6 பேர் பலியான தகவல் வெளியாகி உள்ளது. அதன் விவரம் :-கர்நாடகாவில் மனோஜ் குமார் (10) – சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பள்ளியில் இருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டதால் மாணவன் உயிரிழந்தார்.
அதேபோல மகந்தேஷ் நாயக் (38) – பெங்களூருவில் மாரடைப்பால் வீழ்ந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.அசோக் ஜேரிகவாடா (40) – சரக்கு வேன் டிரைவர், பெலகாவியில் மார்க்கெட்டில் மாரடைப்பால் இறந்தார்.
இதேபோல ஜீவிதா குசாகூர் (26) – தார்வார் மாவட்டத்தை சேர்ந்த சிவில்ச் தேர்வுக்கு தயார் செய்த மாணவி மாரடைப்பால் உயிரிழந்தார்.அக்ஷய் (22) – தாவணகெரே மாவட்ட மாணவர் வீட்டில் மயங்கி விழுந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கிரீஷ் (27) – கூலி தொழிலாளி, ராமநகரில் தோட்டத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். இப்படி 6 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்.இந்த தொடர் மாரடைப்பு மரணங்களால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
தாவணகெரே மாவட்டத்தில் மட்டும் கடந்த 3 மாதங்களில் 75-க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

