சாதனைகள் புரிந்த மருத்துவர்களுக்கு காக்கும் கரங்கள் விருது..SRM குழும சேர்மன் ரவி பச்சமுத்து வழங்கினார்!

Loading

ரோட்டரி கிளப் ஆப் சென்னை மருத்துவர்கள் குடும்பம் நடத்திய மருத்துவர்கள் தின விழாவில்மருத்துவ துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்த மருத்துவர்களுக்கு காக்கும் கரங்கள் என்ற சிறப்பு விருதினை எஸ் ,ஆர், எம் ,குரூப் சேர்மன் ரவி பச்சமுத்து வழங்கினார்.

ரோட்டரி கிளப் ஆப் சென்னை மருத்துவர்கள் குடும்பம் நடத்திய மருத்துவர்கள் தின விழா கோலாலமாக கொண்டாடப்பட்டது. சென்னை வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்ற இந்த மருத்துவ தின விழாவில் சிறப்பு அழைப்பாளராக எஸ் ,ஆர், எம் ,குரூப் சேர்மன் ரவி பச்சமுத்து அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்,

ரோட்டரி கிளப் ஆப் சென்னை மருத்துவர்கள் குடும்பம் தலைவர் ஜெயராமன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். செயலாளர் சுஜாதா கஜேந்திரன் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் மருத்துவ துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்த மருத்துவர் களுக்கு காக்கும் கரங்கள் என்ற சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மருத்துவர்கள் தேர்வு செய்து சென்னை வேலூர் ,காஞ்சிபுரம் ,போன்ற தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறந்த மருத்துவமனைகளில் உள்ள சிறந்த மருத்துவர்கள் தேர்வு செய்து அவர்களுக்கு உரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த காக்கும் கரங்கள் விருதினை எஸ். ஆர் .எம் .குழுமத்தின் சேர்மன் ரவி பச்சமுத்து அவர்கள் வழங்கினார்கள். இதில் கிளப் சர்வீஸ் சேர்மன் சித்தார்த் கலந்து கொண்டு மருத்துவ குழுவினரை பாராட்டினார்.

அதனைத் தொடர்ந்து சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான மருத்துவர்கள் மருத்துவ குடும்பத்தினர் மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

0Shares