பாலம் உடைந்து அந்தரத்தில் தொங்கிய லாரி – 9 பேர் பலியான சோகம்!

Loading

குஜராத்தில் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் பைக், கார் உள்ளிட்ட வாகனங்களும், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களும் மகிசாகர் ஆற்றில் கவிழ்ந்தன.இந்த விபத்தில் 9 பேர் பலியாகினர்.

45 ஆண்டுகள் பழமையான பாலம் ஒன்று குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ளது.இந்த பலமானது வதோதரா நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த பாலம், மாவட்டத்தின் முஜ்பூர் ,கம்பீரா மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளை இணைக்கிறது

இந்நிலையில், இன்று காலை இந்த பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் பாலத்தில் சென்று கொண்டிருந்த பைக், கார் உள்ளிட்ட வாகனங்களும், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களும் மகிசாகர் ஆற்றில் கவிழ்ந்தன. அப்போது லாரி ஒன்று அந்தரத்தில் தொங்கியபடி இருந்தது.

பாலத்தில் பல அடி உயரத்தில் இருந்து வாகனங்கள் கீழே விழுந்த இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து போலீசார், பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் உள்ளூர்வாசிகளும் இணைந்து கொண்டனர்.

இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்து உள்ளது. 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு நடவடிக்கை நடைபெற்று வருகிறது என பத்ரா காவல் நிலைய ஆய்வாளர் விஜய் சரண் தெரிவித்துள்ளார். மிக பழமையான இந்த பாலம் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

0Shares