ஆண்டிபட்டி ரேஷன் கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டும் அரசியல் கட்சி பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்!
ரேஷன் கடைக்காரர்களை மிரட்டி அராஜகம் செய்து மாமூல் கேட்பதாகவும் , அரிசி ,சீனி ,கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்கி வெளிமார்க்கெட்டில் விற்று அதிக லாபம் சம்பாதித்து வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி , பிஜேபி முன்னாள் நிர்வாகி தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஆண்டிபட்டி வட்டாட்சியிடம் புகார் மனு அளித்தார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள சக்கம்பட்டி பகுதியில் வசிக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்காக ,மூன்று ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.இந்தக் கடைகளின் மூலம் 2000 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர்.இந்த மூன்று ரேஷன் கடைகளிலும் இப்பகுதியில், ஆண்டிபட்டி பேரூராட்சி இரண்டாவது வார்டு அதிமுக செயலாளராக உள்ள மாரிமுத்து என்பவர் ரேஷன் கடைக்காரர்களை, மாமூல் கேட்டு மிரட்டி வருவதாகவும்,ரேஷன் கடைகளில் இருந்து அரிசி, சீனி, கோதுமை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வாங்கி அதை வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதித்து வருவதாகவும்,
இதனால் ரேஷன் கடைகளில் மூலம் பயன்படும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார் கூறி பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தெற்கு மண்டல துணைத் தலைவர் ராஜா என்பவர்ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.மேலும் மாரிமுத்து மீது நேரிலும் தொலைபேசி மூலமும், அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்பதால் சம்பந்தப்பட்ட மாரிமுத்து என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் புகார் அளித்துள்ளார்.