மாநில அந்தஸ்து கோரி டெல்லியில் போராட்டம் .. MLA தலைமயிலான குழவினரை பாராட்டிய அதிமுக!
புதுடெல்லி போராட்டத்தில் கலந்து கொண்டு தொடர் வண்டி மூலம் புதுச்சேரி திரும்பிய மாநில அந்தஸ்துக்காண போராட்ட குழுவினரை புதுச்சேரி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக மாநில செயலாளர் அன்பழகன் சால்வை அணிவித்து வரவேற்று கவுரவித்தார்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி இந்திய தலைநகர் புதுடெல்லி, ஜந்தர்மந்திர் பகுதியில் 27.06.2025 அன்று ஆர்ப்பாட்டம் மற்றும் அறப்போராட்டம் நடத்தப்பட்டது. அதற்கு முன்னர் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாரதபிரதமர் அலுவலகம், ஜனாதிபதி அலுவலகம்,
துணை ஜனாதிபதி அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சர் அலுவலகங்களில் கடிதம் அளிக்கப்பட்டது.
தலைநகரில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் அறப்போராட்டம் மிகச் சிறப்பான முறையில் அமைந்தது. இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் அறப்போராட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக புதுச்சேரி. காரைக்கால் பொதுநல அமைப்பு தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பல அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக கோஷம் எழுப்பி போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். நம் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் எந்த மாதிரியான வகைகளில் நாம் பின்தங்கியுள்ளோம் என்றும் நமக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் நாம் எந்தெந்த வகைகளில் முன்னேற்றங்களை அடைய முடியும் என்று போராட்டக்குழு தலைவர்கள் சிறப்பாக உரையாற்றினார்கள்.
அதில் குறிப்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், புதுச்சேரி மாநில மக்கள் மேம்பாட்டு கட்சியின் தலைவருமான பேராசிரியர் திரு.ராமதாஸ் ex MP அவர்கள் மாநில அந்தஸ்து பற்றி சிறப்பாக உரையாற்றியதுடன் தனது வலிமையான கருத்தை பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு பேட்டியின் மூலம் தெரியப்படுத்தினார். பொதுநல அமைப்பினரின் இந்த மாநில அந்தஸ்திற்கான போராட்டம் தலைநகர் டெல்லியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு உதாரணம் புதுச்சேரி. காரைக்காலை சேர்ந்த பொதுநல அமைப்பினர் இரயில் வண்டியின் மூலம் இரவு 2:00 மணியளவில் டெல்லியை அடைந்து ரயிலை விட்டு இறங்கியவுடன் போராட்டம் நடத்த சென்ற எங்கள் பொதுநல அமைப்பினரை டெல்லி போலீசார் சுற்றி வளைத்துகொண்டு அவர்களது கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வந்து தங்குமிடம் வரை அழைத்து சென்று தங்க வைத்துவிட்டு மீண்டும் டெல்லி போலீசார் அன்று காலை நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்து அவர்களது கட்டுப்பாட்டில் எங்களை கொண்டு வந்து எங்கள் அனைவரையும் மூன்று பேருந்துகளில் எங்களை அழைத்து சென்று 10 மணிக்கு போராட்டம் நடத்தகூடிய ஜந்தர்மந்திர் பகுதியில் இறக்கிவிட்டார்கள். அப்போது அங்கு ஏராளமான டெல்லி போலீசாரும் . மத்திய ரிசர்வ் படையினர் மற்றும் உளவு பிரிவை சேர்ந்த போலீசாரும் அதிகளவில் குவிக்கப்பட்டு இருந்தார்கள்.
நாங்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்திய பிறகு மீண்டும் டெல்லி போலீசார் எங்களை 2:00 மணியளவில் அதே பேருந்துகளில் ஏற்றி கொண்டு திரும்ப அழைத்து சென்று தங்கும் விடுதியில் வீட்டு சென்றார்கள். டெல்லி போலீசாரின் இந்த செயல்களின் மூலம் தமது மாநில உரிமைக்கான போராட்டத்தின் தாக்கம் அவர்களை சென்றடைந்திருக்கிறது என்பதே, இதற்கு உதாரணமாகும்….
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டி சட்டபேரவையில் 16 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இறுதியாக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 16வது தீர்மானம் இதுநாள் வரை மத்திய அரசுக்கு சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது.
தற்போது ஆளுகின்ற அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் மாநில அந்தஸ்து பெறுவதே எங்கள் குறிக்கோள் என்று ஆட்சியில் அமர்ந்தார்கள். ஆனால் இதுவரை அதற்கான முன்னேடுப்புகள் எதையும் செய்யாமல் இருப்பது ஏன் என்று மக்களிடம் விளக்கி கூறவேண்டும். ஒவ்வொரு சட்டமன்ற கூட்டத்தொடர்களின் போதும் நானும், சக சட்டமன்ற உறுப்பினர்களும் மாநில அந்தஸ்து சம்பந்தமான தீர்மானங்களை கொண்டு வரும்போது அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பேசி தீர்மானங்களை நிறைவேற்றியும், அதேபோல் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தையும் கூட்டி பேசி தீர்மானங்களை நிறைவேற்றி அனைவரையும் டெல்லி அழைத்து சென்று மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று பல முறை சட்டமன்றத்தில் உறுதி கூறிய முதலமைச்சர் அவர்கள் இதுநாள் வரை அதற்கான முன்னேடுப்புகளை செய்யாமல் அலட்சியமாக இருப்பது வருத்தத்திற்குரியது.
இவர்கள் செய்ய தவறிய மாநில அந்தஸ்திற்கான முன்னேடுப்புகளை பொதுநல அமைப்பினர் மாநில நலனுக்காக டெல்லியில் போராடி கொண்டிருக்கும் வேளையில் இங்கு புதுச்சேரியில் ஆளுங்கட்சியினர் தங்களது சுயநல அரசியலுக்காகவும், பதவி சுகத்திற்காகவும் போட்டி போட்டு கொண்டு மூன்று MLAகள் ராஜினாமா செய்துவிட்டதாகவும், அவர்களுக்கு பதிலாக வேறு மூன்று பேருக்கு MLA பதவி வழங்கபோவதாகவும் அரசியல் நாடகங்களை ஆளுங்கட்சியினர் அரங்கேற்றி கொண்டிருந்தார்கள். இவர்களின் இந்த செயலை கண்டு இவர்களுக்கு வாக்களித்த மக்கள் வெட்கி தலைகுனிவுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அரசியல் நாடகத்தால் இந்த ஆட்சி பொறுப்பேற்ற நான்கு ஆண்டு காலத்தில் ஆறு நியமன சட்டமன்ற உறுப்பினர்களை நியமித்து இவர்களுக்கு சம்பளமாக பல லட்சங்களையும், பென்ஷனாக பல லட்சங்களையும் புதுச்சேரி மக்களின் வரிப்பணம் வீண்செலவுக்கு பயன்படுத்தபடுகிறது என்று பொதுமக்கள் ஆத்திரத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
அதேநேரத்தில் மீதமுள்ள பத்து மாத ஆட்சி காலத்தில் தற்போது நியமிக்கப்படும் நியமன சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு மீதமுள்ள காலத்திற்கு இவர்கள் அரசியல் லாபத்திற்காக மீண்டும் யார்யாரை சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க போகிறார்களோ என்று மக்கள் கேள்வியெழுப்பி ஆதங்கபட்டு புலம்பி கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல் இந்த அரசு பொறுப்பேற்ற போது இரண்டு ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்தவர்களை அமைச்சராக நியமித்து பொறுப்பளித்து இருக்கிறோம் என்று பெருமைபித்திக் கொண்ட இவர்கள் அந்த இரண்டு அமைச்சர்களின் பதவிகளை பறித்ததுடன் அந்த சமுதாயத்தின் அரசியலமைப்பு பிரதிநிதித்துவத்தை வேரருக்க செய்திருக்கிறார்கள். இதனால் தற்போது புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் கூட அமைச்சராக இல்லை என்ற அவலநிலைக்கு புதுச்சேரி தள்ளப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கதக்கது. இதை எல்லாம் மக்கள் கூர்ந்து கவனித்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.
பொதுநல அமைப்புகள் மற்றும் பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் மாநில அந்தஸ்திற்காக தலைநகர் டெல்லியில் போராடி கொண்டிருந்த நேரத்தில் ஆளுங்கட்சியனர் இப்படி பதவிசுகத்திற்காக அரசியல் நாடகங்களை நிகழ்த்தி இருப்பது உள்நோக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. பொதுநல அமைப்பினரின் மாநில அந்தஸ்து கோரிக்கை பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் முக்கிய செய்தியாக வரகூடாது என்ற நோக்கத்தில் எப்போதே முடிவெடுத்த ராஜினாமா நாடங்களை அன்றைய தினத்தில் இந்த அரசியல் நாடகத்தை நடத்தி பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் முக்கிய செய்தியாக வெளிவர வேண்டும். அதேநேரத்தில் மாநில அந்தஸ்து கோரிக்கைக்கான டெல்லி போராட்டம் நீர்த்து போக செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செயல்பட்டு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இது தான் உண்மையாகவும் இருக்கிறது. ஆனால் பொதுநல அமைப்பினரின் டெல்லி போராட்டம் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் முக்கிய செய்தியாக வெளிவந்து புதுச்சேரி மக்களின் பாராட்டுகளை பெற்றிருக்கிறது. இதற்காக பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இனிமேலாவது இப்படிப்பட்டவர்கள் தங்களது பதவி சுகத்திற்காக சண்டையிட்டு கொள்ளாமல் ஒற்றுமையாக இருந்து மாநில உரிமைக்காகவும், மக்கள் நலனுக்காவும் பாடுபடுவதுடன் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை முன்னேடுத்து இவர்களது ஆட்சி காலத்திலேயே மாநில அந்தஸ்தை பெற்று தர வேண்டும் என்று புதுச்சேரி மக்கள் சார்பாகவும், பொதுநல அமைப்பினர் சார்பாகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.