புகழ்பெற்ற பாப் இசை பாடகர் திரு.மைக்கல் ஜாக்சன் அவர்கள் நினைவு தினம்!.

Loading

புகழ்பெற்ற பாப் இசை பாடகர் திரு.மைக்கல் ஜாக்சன் அவர்கள் நினைவு தினம்!.

இருபதாம் நூற்றாண்டின் மகத்தான பாப் இசைக்கலைஞர் என்று போற்றப்படும் மைக்கேல் ஜோசஃப் ஜாக்சன் (Michael Joseph Jackson, ஆகஸ்ட் 29, 1958 – ஜூன் 25, 2009) அமெரிக்காவின் இன்டியானா நகரில் பிறந்தார்.

இவர் வெளியிட்ட த்ரில்லர் இசை ஆல்பம்தான் இன்றுவரை உலகிலேயே மிக அதிகமாக விற்பனையான இசை ஆல்பம். இந்த வெற்றி கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம் பிடித்தது. இவர் பல கிராமி விருதுகளையும், அமெரிக்க இசை விருதுகளையும் வென்றுள்ளார். கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றுள்ளார்.

இவரது பிளாக் அன்ட் ஒயிட் என்ற வீடியோ ஒரே நேரத்தில் 27 நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது. 50 கோடி ரசிகர்கள் இதைக் கண்டு ரசித்தனர். இவருடைய மொத்த ஆல்பங்களும் இதுவரை ஏறக்குறைய 20 கோடி விற்பனையாகி உள்ளன.

இவர் பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற்போல நடனம் ஆடுவது, இடையிடையே நடிப்பு என அனைத்தும் கலந்த பாப் நடனத்தைப் படைத்த அபூர்வ இசை மேதை. அமெரிக்காவில் மக்கள் செல்வாக்குப் பெற்ற முதல் கருப்பின இசைக்கலைஞர். இவர் படைத்த ரோபாட், மூன்வாக் போன்ற நடன வகைகள் மிகவும் பிரபலம்.

இன்றளவும் பாப் இசையுலகின் ஈடு இணையற்ற கலைஞராகப் போற்றப்படும் மைக்கேல் ஜாக்சன்
உடல் நலம் பாதிக்கப்பட்டுதனது 50 வது வயதில் (2009) மறைந்தார்.

0Shares