அரசு பள்ளி மாணவர்ளுக்கு இலவச சைக்கிள்.. எதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்!
கொம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்ளுக்கு இலவச சைக்கிள் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார்.
புதுச்சேரி மாநிலத்தில் மேல்நிலை பள்ளி பயிலும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதுச்சேரி அரசு சார்பில் வருடம் தோறும் இலவச மிதி வண்டிகளை வழங்கி வருகிறது, அந்த வகையில் இந்த ஆண்டு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அரசு சார்பில் இலவச மிதிவண்டிகள் புதுச்சேரி மாநிலம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை மூலம் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வில்லியனூர் தொகுதியில் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வில்லியனூர் தொகுதிகுட்பட்ட கொம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் இன்று காலை நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா அவர்கள் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி, வாழ்த்தி பேசினார்.
இதில் பள்ளி தலைமை ஆசிரியை கௌரவஸ் சௌந்தரி, சுவாமிராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், அவைத் தலைவர் ஜலால், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் செல்வநாதன், தொமுச தலைவர் அங்காளன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சரவணன், ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் காளி, ஆதிதிராவிடர் அணி துணைத்தலைவர் கதிரவன்,தொகுதி துணை செயலாளர்கள் ஜெகன்மோகன், அரிகிருஷ்ணன், பொருளாளர் கந்தசாமி, தொகுதி செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், கிளை கழக நிர்வாகிகள் தேவநாதன்,வேலு படையாட்சி, ஜெயபால், ஜனா,சுரேஷ், ரமேஷ், ராஜேந்திரன், மாரியப்பன், பரதன், பாலதண்டாயுதம், அருள்மணி, சேகர், மிலிட்டரி முருகன், முருகேசன், பெலிக்ஸ், பேங்க் சுரேஷ், ராஜேஷ், கோதண்டம், பிரபு, ஆதி, பிரகாஷ், முருகையன், பச்சையப்பன், ராம்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.