உலக சுற்றுச்சூழல் தினம்..விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட தொழிற்சாலைகளுக்கு விருது!
![]()
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தினத்தில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட அரசு துறைகளுக்கும் மற்றும் தொழிற்சாலைகளுக்கு விருதுகளும் வழங்கி சிறப்பித்தார்.
புதுச்சேரி அரசு, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல்துறை மற்றும் புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் 2025 புதுச்சேரி கடற்கரை சாலை, காந்தி திடலில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகளில் பரிசு பெற்ற பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் பரிசுகளும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட அரசு துறைகளுக்கும் மற்றும் தொழிற்சாலைகளுக்கு விருதுகளும் வழங்கி சிறப்பித்தார்.
முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பொதுப்பணி அமைச்சர் லட்சுமி நாராயணன், தலைமைச் செயலர் சரத் சௌகான், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல்துறை செயலர் திரு ஆஷிஷ் மாதவராவ் மோரே, சிறப்பு செயலர் ஒய்.எல்.என். ரெட்டி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
விழாவில் சுற்றுச்சூழல் ஆண்டு அறிக்கை 2024-25 வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தாயின் பெயரில் ஒரு மரம் 2.0 திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. உலகசுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

