இமாகுலேட் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்..எதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்!
வில்லியனூர் இமாகுலேட் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார்.
புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் உயர்நிலைப் பள்ளி படிக்கும் மாணவ ,மாணவிகளுக்கு புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி இந்த கல்வியாண்டில் பையிலும் மாணவ ,மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் மாதா கோவில் வீதியில் இயங்கும் இமாகுலேட் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் இன்று காலை நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி ஆலிஸ்மேரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் கலந்துகொண்டு பள்ளி மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், வர்த்தகர் அணி அமைப்பாளர் ரமணன், வழக்கறிஞர் அணி சக்திவே, ரகு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.