புதிய பயணிகள் நிழற்குடை கட்டும் பணி..MLA சண்முகையா தொடங்கி வைத்தார்!
![]()
குலையன்கரிசல் ஊராட்சி பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டும் பணிகளை சண்முகையா எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் குலையன்கரிசல் ஊராட்சி கூட்டாம்புளி விளக்கில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணிகளை சண்முகையா எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஐகோர்ட் ராஜா, உதவி பொறியாளர் ரவி, வருவாய் ஆய்வாளர் செல்வலட்சுமி, ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, ஒன்றிய துணை செயலாளர்கள் ஹரி பாலகிருஷ்ணன், நாராயணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சண்முகநாராயணன், ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் மகாலிங்கம், விளையாட்டு மேம்பாட்டு அணி மாரிமுத்து, மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் ராஜா ஸ்டாலின், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பொன்னரசு, தொண்டரணி துணை அமைப்பாளர் சைமன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாரிமுத்து, மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் செல்வின், அமைப்புசாரா ஓட்டுநர் அணி மகாலிங்கம், ஸ்பிக் நகர் பகுதி இளைஞரணி அமைப்பாளர் ராஜ், கிளை செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

