கலைஞர் கைவினை திட்டம் தொடக்கம்.. நிகழ்ச்சியை பார்வையிட்ட தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர்!
காணொளி காட்சியில் வாயிலாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் மற்றும் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி அவர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குறு சிறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறையின் சார்பில் கலைஞர் கைவினை திட்டத்தை தொடங்க வைத்து 8,951 பயனாளிகளுக்கு 34, கோடி ரூபாய் மானியத்துடன் 170 கோடி ரூபாய் ஒப்புதல் ஆணைகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் காணொளி காட்சியில் வாயிலாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் மற்றும் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி அவர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டார்கள். உடன் தர்மபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் சுப்பையா பாண்டியன் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராம ஜெயம் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் சங்கர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.