ஆடு வளர்ப்பின் மூலம் வருமானம் ஈட்டி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளுங்கள்..தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் பேச்சு!
பண்ணை சார் வாழ்வாதார தொகுப்பு உறுப்பினர்கள் ஆடு வளர்ப்பின் மூலம் வருமானம் ஈட்டி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தெரிவித்தார்.
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் வட்டம்கெண்டேனஹள்ளி ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு பண்ணை சார்ந்த வாழ்வாதாரம் தொகுப்பில் வழங்கப்பட்டுள்ள ஆடு வளர்ப்பு தொகுப்புக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் நேரில் பார்வையிட்டு பண்ணை சார் வாழ்வாதார தொகுப்பு உறுப்பினர்கள் ஆடு வளர்ப்பின் மூலம் வருமானம் ஈட்டி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். உடன் மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் சந்தோசம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.