82 மீனவர்களுக்கு முதியோர் ஓய்வூதிய ஆணை.. இல்லம் தேடி சென்று வழங்கிய எம்எல்ஏ அனிபால் கென்னடி!
புதுச்சேரி அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ், உப்பளம் தொகுதியில் உள்ள வம்பாகீரப்பளையம் பகுதியைச் சேர்ந்த 82 மீனவர் மக்களுக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை, உப்பளம் தொகுதி எம்எல்ஏ அனிபால் கென்னடி அவர்களின் பரிந்துரையின் பேரில், அவரவர் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஆணை வழங்கப்பட்டது.
இந்த தகவலை, உப்பளம் தொகுதி எம்எல்ஏ அனிபால் கென்னடி அவர்கள், ஒவ்வொருவரது இல்லத்துக்கும் நேரில் சென்று சந்தித்து, அதற்கான ஆணையை வழங்கினார்.
மீனவர் சமுதாயத்தின் நலனுக்காக சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு மக்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.