திருமணம் மீது எனக்கு நம்பிக்கை இல்லை..திரிஷா ஓபன் டாக்!
திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை, நடந்தாலும் ஓகே தான் நடக்கவில்லை என்றாலும் ஓகே தான் என்று திரிஷா வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா, தற்போது பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார்.
அவர் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீஸாகி வரும் நிலையில் தக் லைஃப் படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கமல் ஹாசன், சிம்புவுடன் இணைந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு திரிஷா பதிலளித்தார்.
அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் திருமணம் பற்றிய உங்கள் கருத்து என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு திரிஷா, திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை, நடந்தாலும் ஓகே தான் நடக்கவில்லை என்றாலும் ஓகே தான் என்று திரிஷா வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
