101 வயதான நோயாளிக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை..தனியார் மருத்துவமனை சாதனை!
தாம்பரம், சேலையூர், பீ வெல் மருத்துவமனையில் 101 வயதான நோயாளிக்கு சிக்கலான இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
கிழக்கு தாம்பரம், சேலையூர் பகுதியில் உள்ள பீ வெல் மருத்துவமனை (Be Well Hospitals)யில், பல்வேறு தீவிரமான உடல்நிலை சிக்கல்களுடன் சேர்ந்து மிகவும் சவாலான மருத்துவ நிலைமையில் வந்த 101 வயதான நோயாளிக்கு வெற்றிகரமாக இடுப்பு மாற்று – ஹெமிஆர்த்ரோபிளாஸ்டிஅறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.இடுப்பு எலும்பில் கழுத்து பகுதியில் எலும்பு முறிவுஏற்பட்ட காரணமாக அவசரமாக அனுமதிக்கப்பட்ட நோயாளி, மிகவும் மோசமான உடல்நிலையில் இருந்தார்.
அவர் சேரும் போதே அவருக்கு நியூமோனியா எனப்படும் நுரையீரல் தொற்று, அதனால், அதிக காய்ச்சல்.இது குறித்து சேலையூர், பீ வெல் மருத்துவமனையின் மருத்துவத் தலைவர் மற்றும் மூத்த எலும்பியல் நிபுணர் டாக்டர் கோபிநாத் துரைசாமி கூறுகையில், “101 வயதான நபருக்கு அறுவை சிகிச்சை செய்வது சாதாரணமாகவே கடினமானது. ஆனால் இத்தனை உடல்நிலை சிக்கல்களுடன் உள்ள ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது என்பதே மிகவும் கவனமாகவும் திட்டமிடப்பட்டும் செய்ய வேண்டிய ஒரு செயலாக இருந்தது, இந்த அறுவை சிகிச்சையின் ஒவ்வொரு கட்டத்திலும் மிகுந்த நுண்ணறிவு தேவைப்பட்டது.
அனஸ்தீசியா, நெஃப்ராலஜி, கார்டியாலஜி, கிரிட்டிக்கல் கேர் மற்றும் ஃபிசியோதெரபி போன்ற துறைகளில் நிபுணர்களைக் கொண்ட மருத்துவ குழு ஒருங்கிணைந்த முறையில் நோயாளியின் சிக்கலான உடல்நிலையை கவனித்து கொண்டனர், அதனால் அறுவை சிகிச்சை, எந்தவொரு சிக்கலுமின்றி வெற்றிகரமாக நடைபெற, ஹெமிஆர்த்ரோபிளாஸ்டி முறை மேற்கொள்ளப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பிறகு, நோயாளி தற்போது அவர் சுய உணர்வுடன் சிகிச்சை பெற்று வருகிறார். ” என்றார்..