சுங்கான்கடை ஐயப்பா மகளிர் கல்லூரியில் நுகர்வோர் மன்ற விழா..மாணவிகளுக்கு நுகர்வோர் குறித்து விழிப்புணர்வு!
கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை ஸ்ரீ ஐயப்பா மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறை மற்றும் நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர் மன்ற விழா வணிகவியல் துறை வளாகத்தில் நடைபெற்றது.
இதில் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் தீபா சுனில் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் அஞ்சனா முன்னிலை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் முனைவர் சோனியா வரவேற்புரை வழங்கினார்.
இந்திய நுகர்வோர் சங்கத்தின் தலைவர் அலோசியஸ் மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகள் மத்தியில் “நுகர்வோர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு” குறித்து தலைமையுரையாற்றினார்.
இந்திய நுகர்வோர் சங்கத்தின் செயலாளரும் மேனாள் முதுகலை பொருளாதார ஆசிரியருமான ஹலீல் றகுமான் மாணவிகள் இலகுவாக புரிந்து கொள்ளும் வகையிலும் மாணவிகள் பங்கேற்கும் வகையிலும் மிக சிறப்பாக நுகர்வோர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து மாணவிகள் விரும்பத்தக்க வகையில் சிறப்புரையாற்றினர்.
இந்திய நுகர்வோர் சங்கத்தின் பொருளாளர் கின்ஸ்டன் பிரவின் ராஜ் அவர்கள் சிறப்புரையாற்றினர்.வணிகவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.