ட்ரூத்டெல் ஹேக்கத்தானின் முதல் 5 வெற்றியாளர்கள், வரவிருக்கும் வேவ்ஸ் உச்சிமாநாடு 2025 க்கு முன்னதாக அறிவிக்கப்பட்டனர்

Loading

ட்ரூத்டெல் ஹேக்கத்தானின் முதல் 5 வெற்றியாளர்கள், வரவிருக்கும் வேவ்ஸ் உச்சிமாநாடு 2025 க்கு முன்னதாக அறிவிக்கப்பட்டனர்

 PIB Chennai

இந்திய செல்லுலார் மற்றும் மின்னணு சங்கம் (ஐ.சி.இ.ஏ), தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்துடன் இணைந்து, தொழில்நுட்பத்தின் மூலம் தவறான தகவல்கள் மற்றும் ஊடகங்களை தவறாகக் கையாள்வதை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய சவாலான ட்ரூத்டெல் ஹேக்கத்தானின் முதல் ஐந்து வெற்றியாளர்களை இன்று அறிவித்தது. இந்த ஹேக்கத்தான் வரவிருக்கும் உலக ஒலி ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாடு (வேவ்ஸ்) 2025-க்கான ‘இந்தியாவில் படைப்போம் சவாலின்’ ஒரு பகுதியாகும். புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 25 கண்டுபிடிப்பாளர்கள் தங்கள் முன்மாதிரிகளை தொழில்துறை நிபுணர்கள் குழுவுக்கு விளக்கினர்.

உலகெங்கிலும் இருந்து 5,600 க்கும் மேற்பட்ட பதிவுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, ஐந்து வெற்றிபெற்ற கண்டுபிடிப்பாளர்கள் 10 லட்சம் ரூபாய் ஒட்டுமொத்த ரொக்கப் பரிசை வென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூடுதல் செயலாளரும், இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு அபிஷேக் சிங், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு சஞ்சீவ் சங்கர் உள்ளிட்ட மதிப்புமிக்க பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அக்டோபர் 2024 இல் தொடங்கப்பட்டது, ட்ரூத்டெல் ஹேக்கத்தான், 450க்கும் மேற்பட்ட  நகரங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் நிபுணர்களிடமிருந்து 300 க்கும் மேற்பட்ட தனித்துவமான யோசனை சமர்ப்பிப்புகளைப் பெற்றது. பங்கேற்பாளர்களில் 36% பேர், பெண்கள். தில்லியில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்க 25 இறுதிப் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கோயம்புத்தூரிலிருந்து சண்டிகர் வரை, பெங்களூர் முதல் போபால் வரை என இந்திய இளைஞர்களின் நம்பமுடியாத ஆற்றலை அவர்கள் பிரதிபலிக்கின்றனர்.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கம் ஆகியவற்றின் ஆதரவுடன், ட்ரூத்டெல் ஹேக்கத்தான் நெறிமுறை ஏ.ஐ-ஐ ஊக்குவிப்பதற்கான இந்திய அரசின் பரந்த பார்வையுடன் ஒத்துப்போகிறது.

 

0Shares