துரை வைகோ பிறந்தநாள்.. சேலம் பகுதியில் நீர் மோர் பந்தல் திறந்து கேக் வெட்டி கொண்டாடிய மதிமுக நிர்வாகிகள்!
![]()
மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோவின் பிறந்த நாளை முன்னிட்டு நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு கேக் வெட்டி மதிமுக நிர்வாகிகள் கொண்டாடினர்.
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக தலைமை நிலைய செயலாளருமான துரை வைகோவின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. கட்சி நிர்வாகிகள்பிறந்த
நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சேலம்மத்திய மாவட்ட மதிமுக சார்பில் ரெட்டிபட்டி பகுதியில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.மாவட்டத் தலைவர் சங்கேஸ்வரன் திறந்து வைத்தார் தொடர்ந்து பொதுமக்களுக்கு குளிர்ந்த மோர் வெள்ளரிக்காய் இளநீர் தர்பூசணி நொங்கு உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
மேலும் இன்றைய தினம் துறை வைகோவின் பிறந்த தினம் என்பதால் நீர் மோர் பந்தலில் நிர்வாகிகள் கேக் வெட்டி அவரது பிறந்த நாளையும் சேர்த்து கொண்டாடி மகிழ்ந்தனர் இதில் மதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இதேபோல சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மதிமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துறை வைகோவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

