உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சத்ரஞ்செயபுரம் ஊராட்சியில் கிராம சபை..மாவட்ட ஆட்சியர் மு,பிரதாப் பங்கேற்பு!

Loading

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சத்ரஞ்செயபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மு,பிரதாப் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்ரஞ்செயபுரம் ஊராட்சியில் கிராம சபை நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் மு,பிரதாப், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்,சந்திரன் அவர்கள் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்ரஞ்செயபுரம் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு. நடைபெற்ற சிறப்பு கிராம சபையில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது, அப்பொழுது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது :

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 4 முறை நடைபெற்ற கிராம சபை கூட்டம் 6 முறை கிராம சபை நடத்திட அரசாணை வெளியிட்டு அதன்படி நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில் மொத்தம் 526 கிராம ஊராட்சிகள் உள்ளது ஒவ்வொரு வருடமும் 96 கிராம ஊராட்சிகளை தேர்ந்தெடுத்து அந்த ஊராட்சிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து தருவது தான். அதன் அடிப்படையில் உங்கள் ஊராட்சியை இந்தாண்டு தேர்வு செய்யப்பட்டு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான ரோடு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி விளையாட்டு மைதானம் போன்ற பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்தக் கூட்டத்தின் முதல் கருப்பொருள் தண்ணீர் தான். நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவர் கோட்பாட்டிற்கு இணங்க என்றைக்கு நீரில்லாமல் உலகு உள்ளதோ அன்று மனிதன் வாழ தகுதி இல்லாத நகரமாக மாறி விடும் என்பதே இதற்கு கருப்பொருள். ஆகவே தண்ணீரினை சேமித்து சிக்கனமாக உபயோகிங்கள் உங்களுடைய நிலத்தடி நீரினை மாசுபடுத்தாமல் உங்கள் கழிவுநீரினை கால்வாய்கள் அமைத்து குளம் மற்றும் ஏரியின் நீரினை மாசுபடுத்தாமல் தூய்மையாக உபயோகப்படுத்துங்கள்.

ஆகவே பொதுமக்களாகிய நீங்கள் உங்கள் ஊராட்சியினை முன்னோடி ஊராட்சியாக அதாவது இந்தியாவிலேயே முன் மாதிரியான ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சர் திருக்கரங்களினால் விருது வாங்க வேண்டும் எனவே அனைத்து பொதுமக்களும் தங்களது சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து சிறந்த ஊராட்சியாக செயல்பட வேண்டும். என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.

முன்னதாக பல்வேறு துறைகளின் மூலம் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.இதில் உதவி இயக்குனர் ஊராட்சிகள் யுவராஜ், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பஞ்சாட்சரம், திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம், செல்வராஜ், வேளாண்மை உதவி இயக்குனர் பிரேம், திருத்தணி வட்டாட்சியர் மலர்விழி அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0Shares