அதியமான் கோட்டை ஊராட்சியில் உலக தண்ணீர் தின சிறப்பு கிராம சபை..உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாவட்ட ஆட்சியார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மணி

Loading

நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற உலக தண்ணீர் தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில் காசநோய் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற உலக தண்ணீர் தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில் காசநோய் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி மற்றும் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .

உடன் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் மண்டல உதவி திட்ட இயக்குனர் உமா தர்மபுரி உதவி இயக்குனர் நிர்மல் ரவிக்குமார் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட செயற்பொறியாளர் சிவகுமார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நல்லம்பள்ளி வட்டாட்சியர் உட்பட அரசு துறை அலுவலர்கள் கைம்பெண் நலவாரிய உறுப்பினர் ரேணுகாதேவி முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் பொதுமக்கள் உள்ளனர்.

0Shares