ஆண்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆண்டு விழா..சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு கேடயம்!

Loading

ஆண்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் ஆண்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் எஸ்.புவனேஸ்வரி, தலைமை தாங்கினார். தோழர் ஜி.மோகன், அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கடலூர் மாவட்ட செயலாளர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

ஆசிரியை எ.குமார், வரவேற்புரை நிகழ்த்தினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.நாகவல்லி, ஆண்டறிக்கை வாசித்தார். வி.சங்கர், வட்டார கல்வி அலுவலர் முன்னிலை வகித்தார். சு.மோகன், வட்டார வளமை மேற்பார்வையாளர் அண்ணாகிராமம்,மாணவர்களின் நலன் மற்றும் கல்வியின் முன்னேற்றம் குறித்து பேசினார். சுந்தரமூர்த்தி, ஆசிரியர் பயிற்றுனர் அண்ணாகிராமம் பள்ளியின் வளர்ச்சி ஆசிரியரின் அர்ப்பணிப்பு மாணவர்களின் அடுத்த கட்ட நலன் சார்ந்த விஷயங்களை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எடுத்துரைத்தார்.

மேலும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சிவரஞ்சனி, ராஜகுமாரி, இளவரசி, ராஜஸ்ரீ,சத்தியபாமா,ராஜலஷ்மி,சுபினா,குஷ்பூ,நளினி,பரமேஸ்வரி,கவுசல்யா,பப்பிதா,சுபா,பிரபாவதி,மாலதி, பாக்கியலட்சுமி,பிரவீனா,சத்தியா, இந்து, சந்தியா,துரைராஜ், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் சக்தி,வேலு, ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டு ஆண்டு விழாவை சிறப்பித்தனர்.

சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நன்னடத்தை, தொடர் வருகை பதிவு மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மழலையர்களுக்கான பட்டமளிப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியை ஆசிரியர்கள் குமார்,ரோஸ்,ஜெயந்தி ஆகியோர் நன்றியுரை கூறினார்.பள்ளிக்கு தேவைப்படும் நோட்டு,பேனா, புத்தகம், பேக்இது போன்ற எண்ணற்ற உதவிகளை சீஷா நிறுவனர் டாக்டர். பால்தினகரன், வழங்கி வருகிறார். இதனை சார்லஸ்,சைமன்,செந்தில்குமார் ஆகியோர் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. நிகழ்ச்சியில் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

0Shares