தட்டேந்தி போராட்டம் நடத்திய சுமைதூக்கும் தொழிலாளர்கள்!
ஆண்டிபட்டி வைகை அணை சாலையில் பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமைதூக்கும் தொழிலாளர்கள் தட்டேந்தி போராட்டம் நடத்தினர் .
.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமைதூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த பல ஆண்டுகளாக பணி செய்துவரும் சுமைதூக்கும் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் முதல்தேதியில் மாதவருமானம் வழங்க வேண்டும்.
ஆண்டுதோறும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.நுகர்பொருள் வாணிப கழக வளாகத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு நுகர்பொருள் வாணிப கழக வளாகத்தில் ஓய்வுஅறை , மற்றும் அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும்.
60 வயதுக்கு மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு அரசு சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தட்டேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப் படாவிட்டால் அடுத்த கட்டமாக பல்வேறு கட்ட போராட்டங்கள்மாநில சங்கத்தின் வழிகாட்டுதல்படி நடத்தவும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இப்போராட்டத்தில் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சார்ந்த சுமை தூக்கும் தொழிலாளார்கள் கலந்து கொண்டனர்.