தண்ணீரை உயிர் போல் காப்போம்..உலக தண்ணீர் தினத்தை கொண்டாடுவோம் !.

Loading

தண்ணீரை உயிர் போல் காப்போம்..உலக தண்ணீர் தினத்தை கொண்டாடுவோம் !.

நீரின்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நம்மால் வாழ இயலாது. பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால், இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்கு தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.முன்னரே குறிப்பிட்டபடி, பருவநிலை மாற்றம், அதிகப்படியான பயன்பாடு மற்றும் மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் உலகின் பல பகுதிகள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.

குறிப்பாக வளரும் நாடுகளில் பாதுகாப்பான மற்றும் சுத்தமான தண்ணீரை அணுகுவதற்கு வறுமை ஒரு குறிப்பிடத்தக்க தடையாக உள்ளது. ஏழைக் குடும்பங்களுக்கு நீர் சேவைகளுக்கு பணம் செலுத்த அல்லது நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பங்களில் முதலீடு செய்ய ஆதாரங்கள் இல்லாமல் இருக்கலாம்.

1993ஆம் ஆண்டு முதல் மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினமாக ஐநாவால் அறிவிக்கப்பட்டு இன்றுவரை கடைபிடிக்கப்பட்டு கொண்டாடி வருகிறோம். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல கோடி மக்கள் தண்ணீரின்றி திண்டாடி வரும் நிலையும் எந்த வகையிலும் அகலவில்லை. எனவே, உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில், தண்ணீரை மாசுப்படுத்தாமல், உயிர் போல் காப்போம் என்ற உறுதிமொழியை மனதில் ஏந்தி, அதனை நிறைவேற்ற பாடுபடுவோம்.

0Shares