புதுச்சேரி பழங்குடியினர் பிரச்னை.. டில்லி உயர் அதிகாரியுடன் செல்வகணபதி எம்.பி சந்திப்பு!

Loading

டெல்லியில் உள்ள இந்தியப் பதிவாளர் ஜெனரல் ஸ்ரீ மிருதுஞ்சய் குமார் நாராயணனை,புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி செல்வகணபதி புதுச்சேரி பழங்குடியினர் பிரச்னை குறித்துசந்தித்து பேசினார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் உள்ள காட்டு நாயக்கன், மலக்குறவன் மற்றும் குருமன்ஸ் சமூகங்களையும், ஏனாம் பகுதியில் மட்டும் உள்ள ‘எருகுல’ சமூகத்தையும் பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்க்கும் திட்டத்தை இந்தியப் பதிவாளர் ஜெனரல் ஆராய்ந்துவருகிறார். ஏனாம் பகுதியில் சுமார் 125 எருகுல சமூகக் குடும்பங்களும், புதுச்சேரி பகுதியில் சுமார் 80 குடும்பங்களும் வாழ்கின்றன என்பதை அவரிடம் எம்.பி. செல்வகணபதி எடுத்துரைத்தார்.

புதுச்சேரி வந்து அறிக்கை தயார் செய்த மானுடவியல் அறிஞர் சத்தியநாராயணன் சமர்ப்பித்த அறிக்கையில் எருகுல சமூக மக்களின் எண்ணிக்கையை கண்டறிந்துள்ளார்.

அதன் மூலம் எருகுல சமூக மக்கள் புதுச்சேரி மற்றும் ஏனாம் பிராந்தியத்தில் வாழ்கின்றனர் என்ற ஆதாரத்தை அவர் தெரிவித்திருக்கிறார்.எனவே மற்ற 3 சமுகத்தினருடன் எருகுலா சமூகத்தையும் சேர்த்து 4 சமூகத்தையும் பழங்குடியின மக்களாக அறிவிக்க வேண்டும். அதற்கு ஜனாதிபதிக்கு உடனடியாக பரிந்துரை செய்ய வேண்டும் என செல்வகணபதி எம்.பி. இந்திய பதிவாளர் ஜெனரலை வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

0Shares