கட்டிட அனுமதி பெற பொறியாளர்கள் விண்ணப்பிக்க முடியாது?

Loading

கட்டுமான பொறியாளர்கள் பதிவு சம்பந்தமாக பெயிரா கடிதம்.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள்,
கட்டிட வடிவமைப்பாளர் (ARCHITECT), பதிவு பெற்ற கட்டிட பொறியாளர்கள் (REGISTERED ENGINEERS), உரிமம் பெற்ற கட்டிட அளவையர்கள் (LBS) ஆகியோர்களின் பதிவினை ( CMDA / DTCP / CORPORATION / MUNICIPALITY / TOWN PANCHAYAT / RURAL PANCHAYAT -BDO ) மேற்கண்ட ஏதாவது ஒரு துறையில் பதிவு செய்யும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்.. தமிழகத்தில் தற்பொழுது மனைப் பிரிவு, மனை உட்பிரிவு, கட்டட அனுமதி, நில மறுவகைபாடு மாற்றம் உள்ளிட்ட அனுமதிகளை பெறுவதற்கு பொதுமக்கள், கட்டிட வடிவமைப்பாளர் (ARCHITECT), பதிவு பெற்ற கட்டிட பொறியாளர்கள் (REGISTERED ENGINEERS), உரிமம் பெற்ற கட்டிட அளவையர்கள் (LBS) உள்ளிட்டோரை அணுகி இவர்களின் உதவியுடன், அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, திட்ட அனுமதிக்கான வரைபடங்களை தயாரித்து, சம்பந்தப்பட்ட (CMDA-DTCP) அனுமதி வழங்கும் அதிகாரம் பெற்ற துறையின் இணையதளம் வாயிலாக (Online Portal) ஒற்றை சாளர முறையில் (SINGLE WINDOW SYSTEM) இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அனுமதி பெற்று தருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்த வரைக்கும் அனுமதி பெற தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டட விதிகள் TNCDBR-2019 இன் படி மாநிலம் முழுமைக்கும் ஒரே மாதிரியான விதிகளையும், மற்றும் மாநிலம் முழுவதிலும் இருந்து அனுமதி கோரி எளிதில் எங்கிருந்தும் எந்நேரத்திலும் ஒற்றை சாளர முறையில் இணையத்தில் விண்ணப்பித்து அனுமதி பெறும் வகையிலும், மேலும் கூடுதலாக உடனடி அனுமதி (Instant Approval) பெறும் வகையிலும், பல சிறப்பான திட்டங்களை தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முன்னெடுத்து செயல்படுத்தி வருவது பொதுமக்கள் மற்றும் கட்டுனர்கள் – மனை அபிவிருத்தியாளர்கள் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் தொழில் முனைவோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் தமிழக அளவில் மேற்கண்ட அனுமதிகளை பெறுவதற்கு திட்டம் தயாரித்து விண்ணப்பிக்கக் கூடிய அதிகாரம் பெற்ற, கட்டிட வடிவமைப்பாளர் (ARCHITECT), பதிவு பெற்ற கட்டிட பொறியாளர்கள் (REGISTERED ENGINEERS), உரிமம் பெற்ற கட்டிட அளவையர்கள் (LBS) சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (CMDA), நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP), மாநகராட்சி (CORPORATION), நகராட்சி (MUNICIPALITY), பேரூராட்சி (TOWN PANCHAYAT) மற்றும் ஊராட்சிகள் (RURAL PANCHAYAT) என தனித்தனியே பதிவினை செய்ய வேண்டியுள்ளது. இதன் காரணமாக கட்டிட வடிவமைப்பாளர் (ARCHITECT), பதிவு பெற்ற கட்டிட பொறியாளர்கள் (REGISTERED ENGINEERS), உரிமம் பெற்ற கட்டிட அளவையர்கள் (LBS) மேற்கண்ட துறைகளில் தனித்தனியே பதிவினை செய்வதற்கு பல சங்கடங்களுக்கும் மிகுந்த சிரமத்திற்கும் ஆளாகின்றனர்.

ஆகவே பெருமதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் இதனை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, தற்பொழுது நடைமுறையில் உள்ள கட்டிட வடிவமைப்பாளர் (ARCHITECT), பதிவு பெற்ற கட்டிட பொறியாளர்கள் (REGISTERED ENGINEERS), உரிமம் பெற்ற கட்டிட அளவையர்கள் (LBS) மேற்கண்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்களில் பதிவு செய்யும் நடைமுறையினை மாற்றியமைத்து, ( CMDA / DTCP / CORPORATION / MUNICIPALITY / TOWN PANCHAYAT / RURAL PANCHAYAT-BDO) மேற்கண்ட ஏதேனும் ஒரு துறை சார்ந்த அலுவலகத்தில் மட்டும் பதிவு செய்திருந்தாலும் அதன் அடிப்படையில் மாநிலம் முழுமைக்கும் ஒற்றை சாளர முறையிலேயே எங்கிருந்தும் எந்நேரத்திலும் எளிதில் கட்டிட வடிவமைப்பாளர் (ARCHITECT), பதிவு பெற்ற கட்டிட பொறியாளர்கள் (REGISTERED ENGINEERS), உரிமம் பெற்ற கட்டிட அளவையர்கள் (LBS) போன்றவர்கள் மனை பிரிவு, மனை உட்பிரிவு, கட்டட திட்ட அனுமதி, நில வகைபாடு மாற்றம் உள்ளிட்ட அனுமதிக்கான திட்டங்களை தயாரித்து விண்ணப்பிக்கும் வகையில் வழிவகை செய்திட வேண்டும் என தமிழ்நாடு வீட்டுவசதி துறை அமைச்சருக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்

0Shares