வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டுறவு பணியாளர்களுக்கு ஆளுமைத் திறன் பயிற்சி வகுப்பு!
வேலூர்மாவட்டம்கூட்டுறவுசங்கங்களில்பணிபுரியும்பணியாளர்களுக்குபணிநிலைத்திறன் மேம்பாட்டு புத்தாக்கப் பயிற்சி, ஆளுமைத்திறன் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலக காயுது வெள்ள கூட்டுரங்கில் மாவட்ட ஆட்சியர் திருமதி வே.இரா.சுப்புலெட்சுமி,தலைமையில்நேற்றுநடைபெற்றது.
இதில் அனைத்து கூட்டுறவு நியாயவிலைக் கடையில் பணிபுரியும் சுமார் 450 விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களில் அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி. குப்பம் மற்றும் பேர்ணாம்பட்டு ஆகிய வட்டாரங்களில் பணிபுரியும் சுமார் 238 விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கான (முதற் கட்டம்) பணி நிலைத் திறன் மேம்பாட்டு புத்தாக்க பயிற்சி மற்றும் ஆளுமை திறன் பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சி வகுப்பானது வட்டாரங்களில் பணிபுரியும் விற்பனையாளர்களில் சிறப்பாக செயல்பட்ட விற்பனையாளர்களுக்கு வட்டாரத்திற்கு இருவர் வீதம் தேர்வு செய்யப்பட்டு வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது கோடை காலத்தில் நுகர்வோர் களிடம் கனிவாக பேசவேண்டும் என்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணியில் கடமை மற்றும் பொறுப்புகுறித்துபேசினார்கள்.
விற்பனையாளர்கள்தங்களதுகுறைகளைஇணைப்பதிவாளர்மற்றும்துணைப்பதிவாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் வேலூர் மண்டல கூட்டுறவுசங்கங்களின் இணைப்பதிவாளர் சாதிருகுணஐயப்பதுரை,வேலூர் பொது விநியோகத்திட்டதுணைப்பதிவாளர்(பொறுப்பு) கி.சத்திய நாராயணன், வேலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெ.ரகு மற்றும் மேலாளர் ம.அசோகன் வேலூர் கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் நா.வே. ஏழுமலை ஆகியோர் உடன் இருந்தனர்.