ஒரசோலை லயன்ஸ் சார்பில் மார்பாக புற்றுநோய் மருத்துவ முகாம்..ஏராளமான பெண்கள் பங்கேற்பு!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஒரசோலை கிராமத்தில் லயன்ஸ் சார்பில்நடைபெற்ற கிராம மக்களுக்கு பெண்களுக்கான மார்பாக புற்றுநோய் மருத்துவ முகாமில் ஏராளமான பெண்கள் பங்கேற்று பயனடைத்தனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட, ஒரசோலை கிராமத்தில்,
ஒரசோலை லயன்ஸ் சார்பில், கிராம மக்களுக்கு பெண்களுக்கான மார்பாக புற்றுநோய் மருத்துவ விழிப்புணர்வு, மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில், கோவை பிஎஸ்.ஜி மருத்துவமனை மருத்துவர்கள் சுதாராமலிங்கம், ராமகிருஷ்ணன், மதிவாணி, ஜோஸ்வின் பிரஸில்லா சார்லஸ், திரிசங்கு,ஆகியோர் கலந்து கொண்டு, கிராம மக்களுக்கு பொது சிகிச்சை, BP SUGAR HEMOCLOBINஉட்பட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டும், மற்றும் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் குறித்தம் மருத்துவ விழிப்புணர்வு
வழங்கினர்.
இந்த மருத்துவ முகாமில் 500 க்கு மேற்பட்ட கிராம மக்கள்,கலந்து கொண்டு பயனடைந்தனர்.மிக சிறப்பாக. சமூக சேவை ஆற்றிவரும், ஒரசோலை லயன்ஸ் குழுவிற்கு செய்தி அலசல் நாளிதழ் சார்பாகவும், பொது மக்கள் சார்பாகவும், சமூக ஆர்வலர்களின்,சார்பாகவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் சமூக பணி.