அனைத்து கிராம கோவில்களுக்கும் இலவச மின்சார வழங்க வேண்டும்..கிராம கோவில் பூசாரிகள் வலியுறுத்தல்!

Loading

அனைத்து கிராம கோவில்களுக்கு இலவச மின்சார வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நீலகிரி மாவட்ட கிராம கோவில் பூசாரிகள் பேரவை பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு விசுவ இந்து பரிசத், நீலகிரி மாவட்ட கிராம கோவில் பூசாரிகள் பேரவை பொதுக்குழு கூட்டம் நீலகிரி மாவட்டம் குன்னூர் வள்ளுவர் நகர் அருள்மிகு ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தை கேசவன் மாவட்ட இணை அமைப்பாளர் அவர்கள் தலைமையில், சங்கர் மாவட்ட அமைப்பாளர் அவர்கள் முன்னிலையில், .விஜயகுமார் வழக்கறிஞர் மாநில இணை பொது செயலாளர், ரங்கசாமி கோவை மண்டல் இணை அமைப்பாளர் அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இக்கூட்டத்தை ரமேஷ்பாபு குன்னூர் நகர செயலாளர் அவர்கள் வரவேற்புரையும் ரவிக்குமார் குன்னூர் நகரத் தலைவர் அவர்கள் நன்றி உரையுடன் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மற்றும் இந்த நிகழ்ச்சியில் குன்னூர் கோத்தகிரி கூடலூர் ஊட்டி ஆகிய பகுதியிலிருந்து முக்கிய நிர்வாகிகள்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்’

நிகழ்ச்சிகள் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கும் ஓய்வூதியம் ரூபாய் 4 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக தமிழக அரசு உயர்த்தி தரவேண்டும்

அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத ஊக்கதொகையாக 10000 ரூபாய் வழங்க வேண்டும்

அனைத்து கிராம கோவில்களுக்கு இலவச மின்சார வழங்க வேண்டும்.

ஓய்வூதியம் பெரும் பூசாரிகள் இறந்தால் அவர்கள் பெரும் ஓய்வூதிய தொகையை அவரது மனைவிக்கு வழங்க வேண்டும்.

நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கு மாதத் தொகையும் ஓய்வூதியமும் வழங்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்க வேண்டும் என்று பொது குழு கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகள் சம்பந்தமான மனுவை நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் நீலகிரி மாவட்ட¹ இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்து அவர்கள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று கோரிக்கைகளை நிறைவேற்ற பரிந்துரை செய்து தருமாறு பேரவையின் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது.

0Shares