புதிய நியாய விலை கட்டிடம்..எம்எல்ஏ மகாராஜன் திறந்து வைத்தார்!
ஆண்டிபட்டி ஊராட்சியில் புதிய நியாய விலை கட்டிடம் மற்றும் நாடக மேடையை திமுக எம்எல்ஏ மகாராஜன் திறந்து வைத்தார்.
தேனி மாவட்டம் ,ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள திம்மரசநாயக்கனூர் ஊராட்சி, பொம்மி நாயக்கன்பட்டியில், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூபாய் 13.50 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடைக்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அதனை சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து சண்முகசுந்தரபுரம் ஊராட்சி முத்து சங்கிலி பட்டியில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, நாடக மேடை கட்டப்பட்டது. அதனையும் சட்டமன்ற உறுப்பினர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார்.
இந்நிகழ்ச்சியில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், ஆண்டிபட்டி பேரூர் செயலாளர் பூஞ்சோலை சரவணன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் போஸ், சரவணன் ,பொறியாளர்கள் ராமமூர்த்தி, நாகராஜ், திம்மரச நாயக்கனூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அக்ஷயா,ஊர் நாட்டாமை ராம்குமார், கிளைச் செயலாளர் சின்ன முனியாண்டி ,கிழக்கு ஒன்றிய பொருளாளர் சௌந்தரராஜா, ஒப்பந்ததாரர்கள் கோவிந்தராஜ், ஜெயபாண்டியன் உள்பட திமுக நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.