மும்மொழி கொள்கையில் திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும்..கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!
மும்மொழி கொள்கையில் திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் டாஸ்மாக்கில் ஊழலில் அமலாக்கத்துறை வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
வேலூர்மாவட்டம்,வேலூரில் புதிய தமிழகம் சார்பில் இட ஒதுக்கீடு மீட்பு கருத்து கேட்பு கூட்டம் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் நடந்தது .இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெயசீலன் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர் .
அப்போது பேசிய புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ,இட ஒதுக்கீடு உரிமை மீட்பு கருத்தரங்கம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர் வாழ்வுரிமை கருத்தரங்கம் இன்று நடக்கிறது .இந்த இரண்டு அம்சங்களை கடந்த ஜுலை மாதம் முதல் முதற்கட்டமாக பல மாவட்டங்களில் துவங்கி இன்று வேலூர் நாளை சேலம் நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இக்கூட்டத்தை நடத்துகிறோம்.
தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுகீடு சமூக நீதி என திமுக அண்ணா திமுக இரண்டு கட்சிகள் சொல்கிறார்கள், இந்திய அரசியல் சாசனம் சமூக கல்வி ரீதியாக பின் தங்கிய மக்களை பட்டியலிட்டு தமிழகத்தில் 26 சாதிகளுக்கு 18 சதவிகித இட ஒதுக்கீட்டை அறிவித்தனர் ஆனால் தமிழகத்தில் 18 சதவிகித இட ஒதுக்கீட்டை முறையாக கொடுக்கவில்லை காங்கிரஸ் திமுக அதிமுக எந்த கட்சியும் வழங்கவில்லை. இதுகுறித்து வெள்ளை அறிக்கை கேட்டேன் பின்னடைவு பணியிடங்களையும் நிரப்பவில்லை 2009 ஆம் ஆண்டு கருணாநிதி ஒரு பிரிவான அருந்ததிய மக்களுக்கு 3 சதவிகிதம் சரியாக ஆய்வு செய்யாமல் வெளியே அந்த இட ஒதுக்கீட்டை கொடுக்காமல் 18 சதவிகித இட ஒதுக்கீட்டில் அவர்களுக்கு வழங்கியுள்ளனர்.
குறிப்பாக திருவள்ளூவர் பல்கலைக்கழக பேராசிரியர் பணியிடம் நிரப்பியதில் அருந்ததியினருக்கு மட்டும் கொடுத்தனர் .இதில் ஆதிதிராவிடர் தேவேந்திர குள வேளாளரும் பாதிக்கபடுகின்றனர் .திமுக அரசும் அநியாயம் செய்கிறது. இதற்கு காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகளும் உடந்தையாக உள்ளது .நாங்கள் யாருக்கும் கொடுக்க வேண்டாம் என சொல்லவில்லை .முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் .
மாஞ்சோலை தொழிலாளர்களை இந்த அரசு கட்டாய படுத்தி நாங்கள் புலி வளர்க்கிறோம் என சொல்லி அப்புறப்படுத்த நினைக்கிறார்கள். நான் ஏற்கனவே 2023 ஆம் ஆண்டு 19 மது ஆலைகள் மற்றும் டாஸ்மாக் மது குடிப்பகங்களில் ஒரு லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக கூறினேன். தற்போது அமலாக்க சோதனை நடக்கிறது .இதுகுறித்து முழுமையாக அமலாக்கத்துறை விசாரணை செய்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். 19 மது ஆலைகள் கலால் வரி செலுத்தாமல் பாதி மதுவை கள்ளத்தனமாக விற்கின்றனர். மிகப்பெரிய டாஸ்மாக் ஊழல் நடக்கிறது .எல்லோரும் மணல் கொள்ளையர்களுடன் கூட்டு வைக்கின்றனர். அமலாக்கத்துறை ட்ரோன் மூலம் சோதனையும் எல்லா ஆறுகளிலும் ஆய்வு செய்தனர். அதனை கிடப்பில் போடாமல் முழுமையாக விசாரிக்க வேண்டும் .நீர் நிலைகள் கொள்ளை கனிம வள கொள்ளை டாஸ்மாக் கொள்ளை ஆகியவற்றை லட்சியமாக கொண்டு அரசு செயல்படுகிறது .லட்சக்கணக்கான கோடி மணல் கொள்ளை நடந்துள்ளது .அதனை ஏன் கிடப்பில் போட்டுள்ளனர். அமலாக்கத்துறை என்ன விசாரித்தனர் என சொல்ல வேண்டும் மணல் கொள்ளை விசாரணை குறித்து அமலாக்கத்துறை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
மும்மொழி கொள்கையில் திமுக தான் கையில் எடுத்து அரசியலாக்குகிறது. மக்கள் தெளிவாக உள்ளனர். மூன்றவது அவரர் அவரர் விருப்பம் திமுக தங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். திமுக வரட்டு பிடிவாதமாக இருக்கிறது. மும்மொழி என சொல்லி தமிழக மக்களை வஞ்சிக்க கூடாது. பள்ளிகளில் பாலியல் சீண்டலில் ஈடுபடும் ஆசிரியர்களை நிரந்தர பணிநீக்கம் செய்து அவர்களின் கல்வி சான்றுகளை ரத்து செய்வது என்பது வரவேற்கதக்கது அப்போது தான் வேலியே பயிரை மேய்வதை தடுக்க முடியும் என கூறினார்