மாசி மாத வளர்பிறை பிரதோஷம் வழிபாடு.. காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் குவித்த பக்தர்கள்!
வாலாஜாபேட்டை ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் மாசி மாத வளர்பிறை முன்னிட்டு நடைபெற்ற பிரதோஷத்தில் பக்தர்கள் பிரதோஷ நாதரை தாலாட்டு பாடல்களை பாடியபடி சிறப்பு வழிபாடு செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ,வாலாஜாபேட்டை அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் மாசி மாத வளர்பிறை பிரதோஷ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது .முன்னதாக கோவிலில் நந்தி பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், தேன், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்று மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது..
அதனைத்தொடர்ந்து பல்வேறு வகையான பூ மாலைகள் மற்றும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பிரதோஷ நாதரை பக்தர்கள் தோளில் சுமந்து சிவபூதகன வாத்தியங்களுடன் நமச்சிவாய.. நமச்சிவாய..நமச்சிவாய.. என பக்தி மனத்துடன் கோஷங்களை எழுப்பி கோவிலை வலம் வந்து கோவில் முன்பாக தோளில் சுமந்து வந்த பிரதோஷ நாதரை பக்தர்கள் தாலாட்டு ஆடியபடி கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் சிவபுராணம் மற்றும் பல்வேறு சிவ பாடல்களை பாடியபடி சிவனை மனதில் நினைத்தவாறு பக்தி பரவசத்துடன் சுவாமியை வழிபட்டு சென்றனர்..