ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்..சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள்!
கோலி பண்டிகையை கொண்டாட வட மாநில மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் வெளியூர்களில் உள்ள வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு படை எடுத்து வருகின்றனர்.
வட மாநிலங்களில் முக்கிய பண்டிகையான கோலி பண்டிகை ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம், அந்த வகையில் இந்த ஆண்டு கோலி பண்டிகை வருகின்ற 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இந்த கோலி பண்டிகையை கொண்டாட வட மாநில மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் வெளியூர்களில் உள்ள வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு படை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் தமிழகத்தில் இருந்து ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு செல்வதை ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சென்னை, திருப்பூர், கோவை போன்ற பல்வேறு நகரங்களில் தங்கி வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்கள் ரயில் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்து வருகின்றனர், இதனால் ரயில் நிலையங்களில் வட மாநில தொழிலாளர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது .ரயில்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்றும் வட மாநில தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர் .திருப்பூரில் பீகார், ஒரிசா, மேற்குவங்கம் ,உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பனியன் போன்ற ஆடை கம்பெனிகளில் வேலை செய்து வருகின்றனர்.இவர்கள் திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து தாங்கள் சொந்த ஊருக்கு செல்வதால் அங்கு கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.